உங்களுக்கு தெரியுமா இந்த பொருட்கள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.. ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!

ஏராளமானோர் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிலர் இந்த உடல் பருமன் பிரச்சனையை சமாளிப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் வேறு சில செயல்களை பின்பற்றி வருகிறார்கள். ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம். அதோடு உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுழைப்பு இல்லாமை, மோசமான டயட் அல்லது உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவைகளும் காரணங்களாகும்.

ஒருவரது உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான உயர் கொலஸ்ட்ரால், டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், குறட்டை, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் போன்றவற்றால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல் எடையைப் பராமரிக்க உதவியாக இருக்கும். அதே சமயம், குறிப்பிட்ட சில மூலிகைப் பொருட்களும் உடல் எடையைக் குறைக்க தூண்டும். இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் மூலிகைப் பொருட்கள் குறித்துக் காண்போம்.

இஞ்சி இஞ்சி உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். அதுவும் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, பசியுணர்வைக் குறைக்கும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் தடுக்கப்படும். மேலும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும்.

* 2-3 கப் இஞ்சியை டீயை தினமும் 2-3 முறை குடியுங்கள். * உணவுகளுக்கு இடையே சிறு இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது துருவிய இஞ்சியை உணவுகளில் தூவி சாப்பிடுங்கள். * வேண்டுமானால் இஞ்சி கேப்ஸ்யூலை சாப்பிடுங்கள். ஆனால் இந்த கேப்ஸ்யூலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் எடுக்க வேண்டும்.

க்ரீன் டீ க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் கலோரிகளை அதிகமாக எரிக்கும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும் செயல்முறையைத் தூண்டிவிடும். மேலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் க்ரீன் டீயை தினமும் குடித்து வர, உடல் எடை குறையும் என ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

* ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்ட வேண்டும். * இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

மஞ்சள் உடல் எடை குறைய மஞ்சளும் பெரிதும் உதவியாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள், பித்தநீரின் உற்பத்திக்கு உதவி, கொழுப்புக்களை உடைத்தெரியும். மேலும் மஞ்சள் உடல் பருமனுக்கு காரணமான அழற்சிக்கான அறிகுறியையும் குறைக்கும்.

* ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 எலுமிச்சையின் சாறு, 1 சிட்டிகை மிளகாய் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். * இல்லாவிட்டால், 2 கப் கொதிக்கும் நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் இஞ்சி தூள் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தினமும் இரண்டு வேளை குடியுங்கள்.

செம்பருத்தி அழகிய சிவப்பு நிற பூவான செம்பருத்தியில் ஊட்டச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இது கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் உலர்ந்த செம்பருத்தி இதழ்களை 2 டேபிள் ஸ்பூன் போட்டு, 5-10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் 2-3 கப் குடியுங்கள்.

கொரியன் ஜின்செங் ஜின்செங் என்னும் மூலிகைப் பொருள், உடலின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். அதற்கு தினமும் 2 கப் ஜின்செங் டீயைக் குடியுங்கள். இந்த ஜின்செங் டீ தற்போது மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

டான்டேலியன் டான்டேலியன் என்பது உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கு ஏற்ற மிகச்சிறந்த மூலிகைப் பொருள். இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், நீர்ப்பெருக்கி மற்றும் மலமிளக்கும் பண்புகள் போன்று செயல்படும். இதனால் இது அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்வதோடு, நீர்த்தேக்கத்தால் பருமனான உடலைக் குறைக்க உதவும். மேலும் இந்த மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருப்பதோடு, உடலில் இருந்து டாக்ஸின்களை நீக்கும், பசியைக் கட்டுப்படுத்தும் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவும். ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் ஒரு கப் டான்டேலியன் டீ குடியுங்கள். ஒரு கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் டான்டேலியன் வேரைப் போட்டு 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் கழித்து வடிகட்டி குடியுங்கள்.

கற்பூரவள்ளி கற்பூரவள்ளி இலைகளும் உடல் எடையைக் குறைக்க உதவும். இதற்கு இதில் உள்ள கார்வாக்ரோல் என்னும் பொருள், கொழுப்புக்களைக் கரைக்க உதவும். இந்த மூலிகை செரிமானத்தை சீராக்குவதோடு, வயிற்று உப்புசத்தைக் குறைக்கும். மேலும் ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்குக் காரணமான மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். * சில கப் கற்பூரவள்ளி டீயை தினமும் குடியுங்கள். இந்த டீ தயாரிப்பதற்கு, 3 டீஸ்பூன் கற்பூரவள்ளி இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடியுங்கள். * இல்லாவிட்டால், 4-5 துளிகள் கற்பூரவள்ளி இலை எண்ணெயை குடிக்கும் பழச்சாறுகளுடன் சேர்த்து கலந்து, தினமும் ஒரு கப் குடியுங்கள்.

சேஜ் சேஜ் இலைகளும் உடல் எடையைக் குறைக்க உதவும். அதுவும் இந்த இலை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கலோரிகளின் அளவைக் குறைக்க உதவும். அதற்கு ஒரு கப்பில் 1 டேபிள் ஸ்பூன் நற்பதமான சேஜ் இலைகளைப் போட்டு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறைக் குடியுங்கள்.

புதினா புதினா பசியைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாத கலோரிகளை உட்கொள்வது குறைந்து, உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் உட்பொருட்களும் உள்ளன. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் 2-3 கப் புதினா டீ குடியுங்கள். * ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளைப் போட்டு, 1 கப் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, குடியுங்கள். * இல்லாவிட்டால், சில துளிகள் புதினா எண்ணெயை துணியில் சேர்த்து, அந்த வாசனையை நுகருங்கள். இதுவும் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

பால் நெருஞ்சில் பால் நெருஞ்சில் உடல் எடையைப் பராமரிக்க உதவும். இதில் உள்ள சிலிமாரின் என்னும் உட்பொருள், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, எடையை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இந்த மூலிகை உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை தக்க வைக்க உதவுவதோடு, கொழுப்பை அதிகமாக கரைக்கும்.

Leave a Reply