மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீரும்!

தலமரங்கள் என்று சில மரங்களை, நாம் திருக்கோவில்களில் கண்டிருப்போம், அவை மட்டும் ஏன் தல மரங்கள் என்று போற்றப்படுகின்றன? அதற்கு என்ன காரணம்? இதுபோல நிறைய கேள்விகள் நம்மில் எழுந்தாலும், வாழ்வில் விடை கிடைக்காத ஓராயிரம் கேள்விகளுள் இதுவும் ஒன்று என நம்மை நாமே தேற்றிக்கொண்டு, கோவிலில் கிடைக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, வீடு திரும்புவோம்!

தற்காலங்களில் நாம் பருகும் நிலத்தடி நீரில் சில இடங்களில், கால்சியம் அதிகரித்துள்ளது என்பதையும், சில இடங்களில், குளோரின் கூடுதல், சில இடங்களில் அயோடின் அதிகம் உள்ளது என்பதை ஆய்வுகளில் இருந்து அறிந்திருப்போம்!

உடலுக்கு கெடுதல் தரும் அளவில் உள்ள அந்த தாதுக்கள் நிறைந்த நீரை பருகுவதாலே, உபயோகிப்பதாலே, மனிதர்க்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதை, செய்திகள் வாயிலாக நாம் அறிந்திருப்போம்.

இக்காலங்களில் மண் பரிசோதனை செய்து, நிலத்தில், தண்ணீரில் உள்ள நிறை மற்றும் குறைகளை அறிந்து, அதற்கேற்ப பாதிப்புகளை சரிசெய்து கொள்கிறோம்!

முன்னோரின் இயற்கை விஞ்ஞானம்!

இயற்கையின் நன்மைகளை, இறைவனுடன் கலந்து வைத்து, இயற்கையையும் வழிபாட்டில் வைத்தார்கள். கோவில் இல்லாத ஊரில்லை எனும் தமிழ்நாட்டில், எல்லா கோவில்களிலும், மூலவர் எனும் கோவிலின் நாயகரோடு, இறைவி, பரிவார தேவதைகள் எனும் பல கடவுள் உருவங்கள் வழிபடப்பட்டு வந்தாலும், அந்த கோவிலின் தல மரமாக, ஒரு தொன்மையான மரம் திகழும். அதுவே, அந்த ஊர் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக, சுவாசிக்க காற்றாகவும், மருந்தாக உண்ணயும் பயன் தரும் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை.

நாம் சில இடங்களில் உள்ள தண்ணீரைப்பற்றி அறிவோம், அந்த பகுதியில் உப்புத்தண்ணீர், வெள்ளை நிற ஆடைகள் எல்லாம், பழுப்பு நிறமாகிவிடும், “அஃகுவா” பயன்படுத்திதான், நீரைப் பருக வேண்டும், என்று சொல்லிக்கொள்வோம், அல்லவா!

அதுபோல, முன்னோர்களும், குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள பாதிப்புகளை அறிந்து அவற்றை நேரடியாக சொல்லாமல், தீர்வாக கோவில்களில் தல மரங்கள் என்ற பெயரில் வைத்து, அவற்றை வணங்கி சுற்றிவரச் செய்வர்.

ஆன்மீகத்தின் பேரிலேயே, மனிதர் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நியதிகளை பெரியோர் வகுத்திருந்தனர். அத்தகைய ஒரு நியதியாகத் திகழும் தல மரங்களின் வரிசையில், கிளுவை மரத்தைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் அறிவோம்.

மரங்கள் பிராணவாயு தர மட்டுமல்ல! நிழலில் அமர, வியாதியையும் தீர்க்கும்!

சில மரங்களின் நிழலில் அமரும்போது, வியாதிகள் சரியாகிவிடும். அந்த மரங்களின் இதமான காற்று, உடலில் படும்போது, அந்த மரத்தின் காற்றால் சரியாகக்கூடிய வியாதிகள் விலகிவிடும், என்பதை முன்னோர் பெரு மக்கள் நன்கு உணர்ந்தே, அத்தகைய மரங்களை தல விருட்சங்களாக, கோவில்களில் வளர்த்தனர்.

மரத்தின் காற்று எப்படி உடல் வியாதியைத் தீர்க்கும் என்ற கேள்வி எழுகிறதா?

தேனீக்கள் மலர்கள் எல்லாம் தேடி தேனை சேகரிக்கும், அதுவே, குறிப்பிட்ட மலர்களில் மட்டும், உதாரணமாக, முருங்கைப்பூக்களில் மட்டும் எடுக்கும் தேன் ஆண்மை குறைபாடு போக்கும், மாம்பூவில் இருந்து கிடைக்கும் தேன் உடலை வலுவாக்கும் என்று சமீப காலங்களில் நாம் அறிந்திருப்போம்.

குறிப்பிட்ட மலர்களில் உள்ள தேன் அதன் தனித்தன்மையால், உடல் பாதிப்பை தீர்ப்பதுபோல, அரிய வகை மரங்களின் காற்று, மனிதரின் உடல்நலத்தை சீராக்கும். அவ்வகையில் கிளுவை மரத்தின் நன்மைகளை இந்த கட்டுரையில் நாம காணலாம்.

கிளுவை மரம் :

பஞ்சவில்வங்கள் எனும் வில்வம், மாவிலங்கை, நொச்சி, விளா மற்றும் கிளுவை இவற்றின் இலைகளில் சிவபெருமானை அர்ச்சிக்க, மிகவிசேஷமான பலன்கள் உண்டாகும் என்ற வகையில், கிளுவை மரத்தின் சிறப்பை நாம் காணலாம்.

வியாதிகளுக்கு அருமருந்தாகும் கிளுவை!

அடுக்கான இலைகள் அமைப்பில் நீண்ட தண்டுகளுடன் காணப்படும் கிளுவை மரங்கள் கிராமப்புறங்களில் வயல்களில் பயிரிட்டுள்ள நெல்மணிகளை கால்நடைகள் மேய்ந்துவிடாமல், பயிரைக் காக்கும்வண்ணம் வேலிகள் அமைத்து அந்த வேலிகளுக்கு அரணாக கிளுவை உள்ளிட்ட மரங்களை நட்டிருப்பர்.

சுவைக்க சிறிது புளிப்புடன் துவர்க்கும் குணமுடைய கிளுவை மரத்தின், இலைகள், வேர்,தண்டுபட்டை மற்றும் பிசின் போன்றவை மனிதர்களின் வியாதிகள் தீர்க்க, இயற்கை நமக்கு அளித்த கொடைகளாகும்,

கிளுவை மரத்தின் பயன்கள்.

சிறு நீரக கற்கள் கரைய :

பொதுவாக கிளுவை மரங்கள், மனிதர்களின் நரம்பு தளர்ச்சி வியாதிகளைப் போக்கவும், சிறுநீரக கற்கள் பாதிப்புகள் நீக்கி, சிறுநீரகத்தைக்காக்கும், அரு மருந்தாவதாக, சித்த மருத்துவம் உரைக்கிறது.

கல்லீரல் வீக்கம் :

கல்லீரல் வீக்கத்தை போக்கும், எலும்பு தேய்மான வியாதிகளை சரிசெய்யும், மூல வியாதியை விலக்கும், மலச்சிக்கலை சரியாக்கும், ஞாபக மறதியை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும். ஆண்மை குறைபாட்டை சரிசெய்து, பெண்களின் மாதாந்திர கோளாறுகளை சரிசெய்யும் வல்லமை மிக்கது, கிளுவை.

உடல் பாதிப்புகள் :

கிளுவை இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, அந்த நீரைப் பருகிவர, உடல் பாதிப்புகள் விலகும்.

ஓலியோ ரெசின் என அழைக்கப்படும், கிளுவை மரப்பிசின், சரும வியாதிகள் மற்றும் வயிற்றுப் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

ஓலியோ ரெசின் என அழைக்கப்படும், கிளுவை மரப்பிசின், சரும வியாதிகள் மற்றும் வயிற்றுப் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

உடல் எடை குறைய

உடல் எடைக்குறைப்பில் பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த இயற்கை நிவாரணியாக, கிளுவைப்பிசின் திகழ்கிறது. பிசினை வறுத்து தூளாக்கி, நீரில் கொதிக்கவைத்து முறையாக சாப்பிட்டு வர, அதிக உடல் எடை குறைந்து, உடல் வனப்பு பெறுவர்.

மதுப் பழக்கத்தாலும் வரும் பாதிப்பை போக்க :

அதிக மதுப்பழக்கத்தாலும், இதர பாதிப்புகளாலும் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தால் கல்லீரல் செயலிழக்கும் கடுமையான நிலையை சரிசெய்து, மனிதர்களின் உடல் நலத்தைக்காத்து, கல்லீரல் இழந்த ஆற்றலைப்பெற்று மீண்டும் நல்லமுறையில் செயல்பட, கிளுவைப்பிசினை தூளாக்கி, வெந்நீரில் கலந்து தினமும் காலையில் பருகி வரலாம்.

சரும நோய்களுக்கு

உடலில் நெடு நாட்களாக இருந்து இன்னல்கள் அளிக்கும் கட்டிகளை கரைத்து, பக்கவாதத்துக்கும் மருந்தாகிறது. கிளுவை இலையை அரைத்து தடவி வர, வெண் குஷ்டம் எனும் சரும வியாதிக்கு நல்ல மருந்தாகிறது, பிசினை நீரில் இட்டு பருகியும் வரலாம்.

சுவாச பாதிப்பு :

சிலருக்கு சுவாசபாதிப்புகளால், தொண்டையில் புண் உண்டாகி, உணவை சாப்பிடமுடியாமல், பேச முடியாமல் அவதிப்படுவர். அவர்கள் கிளுவைப்பிசினை தண்ணீரிலிட்டு சூடாக்கி, அந்த நீரில் வாய் கொப்பளித்துவர, விரைவில் தொண்டைப்புண் ஆறிவிடும்.

வயிற்றுக் கடுப்பு :

சிலருக்கு உடல்சூட்டினால், கடுமையான வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கமுடியாத அளவுக்கு வேதனை ஏற்படும். இந்த பாதிப்புகள் நீங்க, கிளுவை இலைகளை நன்கு அரைத்து, கடைந்த மோரில் கலந்து பருகிவர, வயிற்றுக்கடுப்பு பாதிப்புகள் யாவும் நீங்கிவிடும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்01 133

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button