மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா அரிசி உணவு சமைக்கும் போது இதைச் செய்தால் போதும் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்கலாம்!

நம்முடைய பெரும்பாலான மக்களின் பிரதான உணவாக இருப்பது அரிசி உணவு தான்.மூன்று வேலையும் அரிசிச்சாதம் சாப்பிடும் இந்த மக்களிடத்தில் அரிசி உணவை இனிச் சாப்பிடாதீர்கள் அது உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொன்னால் எப்படி தடாலடியாக நிறுத்த முடியும். சிலர், உடல் நலத்தின் மீது மிகத் தீவிரமான அக்கறை கொண்டிருப்பவர்கள், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இந்த அரிசி உணவைச் சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. மற்ற எல்லா பொருட்களைப் போலவவும் இதில் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே இருக்கிறது.இதனை நாம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம்.இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. அதிலிருந்து தான் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது.

கலோரி : அரிசி சாதத்தின் பெரும் தீங்காக சொல்லப்படுவது அதில் அதிகப்படியான கலோரி தான்.நீங்கள் சமைக்கும் போது செய்யப் போகிற மிகச்சிறிய மாற்றம் அரிசியில் இருக்கக்கூடிய கலோரியை குறைத்திடும். powered by Rubicon Project இலங்கையைச் சேர்ந்த சுதாஹிர் ஜேம்ஸ் என்ற ஆராய்ச்சி மாணவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

என்ன செய்யலாம் : அரிசிச் சாதம் சாப்பிட வேண்டும் ஆனால் கலோரி குறைவாக கிடைக்க வேண்டும் என்றால் இந்த வழிமுறைகளை பின்பற்றிடுங்கள். அரிசியை சமைக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்திடுங்கள். முழுவதும் அரிசி தன் தன்மையை மாறுவதற்கு முன்னதாக தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும், இப்படிச் செய்வதால் சாதரணமாக இருக்கக்கூடிய கலோரி அளவை விட பத்து முதல் பன்னிரெண்டு சதவீதம் கலோரி கிடைக்கும் அளவு குறைந்திடும்.கிட்டதட்ட ஐம்பது சதவீதம் வரையிலும் கூட குறைக்க முடியும்.

வழிமுறை : இந்த முறை மிகவும் எளிமையானது. அரிசி சமைக்க தண்ணீர் சேர்க்கும் போது அரிசியின் அளவைப் பொறுத்து ஒரு ஸ்பூன் முதல் மூன்று ஸ்பூன் எண்ணெய் வரை ஊற்ற வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல சமைக்கும் நடைமுறை தான்.

பாஸ்மதி அரிசி : மற்ற அரிசி வகைகளை விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருக்கிறது.

பச்சரிசி : பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலும் பருமனாகும். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி : புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும்.அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் கூட போதுமானது. பைபர் குறைவாக உள்ள உணவாகவும் புழுங்கல் அரிசி உள்ளது.

பழைய அரிசி : அரிசி எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. குறைந்தபட்சம் 6 மாதமான பழைய அரிசியையே உபயோகப்படுத்த வேண்டும் உமி நீக்கப்படாத சிவப்பு, கருப்பு அரிசிவகைகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், 18 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவாக கருதப்படுகிறது.

சிறந்த அரிசி : உமி நீக்கப்படாத பாரம்பரிய அரிசி வகைகளில் நார்ச்சத்தும், நல்ல கொழுப்பும்கூட சிறிதளவுதான் கிடைக்கிறது. பயிரிடப்படாத நெல் வகையல்லாத மரவகை மூங்கிலரிசி தான் இருப்பதிலேயே சிறந்த அரிசி. எல்லா மூங்கில்களிலும் அரிசி கிடைக்காது, குறிப்பிட்ட சில மூங்கில் வகைகளில் மட்டுமே இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் : மற்ற எல்லா அரிசி வகைகளைக் காட்டிலும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘D’ சத்தும் மிகுந்துள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், மூங்கிலரிசியை நீரிழிவிற்கு எதிரான உணவாக சொல்கிறோம். நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய அரிசியாகவும் இந்த மூங்கில் அரிசி இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க : இனிப்பு மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதுமா?நீரிழிவு வந்துவிட்டால் இனிப்பைத் தவிர்த்தாலே போதும் என்றே பலரும் நினைக்கின்றனர். இனிப்பைத் தாண்டியும் ஏராளமான தவிர்த்தல்கள் வேண்டும் என்பதே உண்மை. குறிப்பாக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை அளவாகவே உட்கொள்ள வேண்டும்.

ஏன் தேவை கார்போஹைட்ரேட் : நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பது கார்போஹைட்ரேட் தான். இந்த மாவுச் சத்து தான் சுகர் அல்லது ஸ்டார்ச்சாக மாற்றம் பெறுகிறது. ஒரு வேளை அளவுக்கு அதிகமாக ஸ்டார்ச் நம் உடலில் சேர்ந்தால் நம் உடலின் குளுக்கோஸ் அளவு அதிரடியாக அதிகரிக்கும்.

எந்த உணவுகளில் : பொதுவாக ஸ்டார்ச், பழங்கள், பால் ஆகிய மூவகை உணவுகளில். காய்கறிகளிலும் ஓரளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இறைச்சி மற்றும் கொழுப்பு உணவுகளிலோ மிகக் குறைவான அளவு கார்போஹைட்ரேட்தான் காணப்படுகிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவு என்பது முழுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், பட்டாணி, மொச்சை போன்ற அவரையினங்கள், பீன்ஸ் மற்றும் கொழுப்பு குறைவான பால் பொருட்கள் அடங்கியிருக்கிறது.28 1514460634 5

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button