மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா?அப்ப இத படிங்க!

மூட்டு வலியில் இருந்து மீள சில மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக இதோ..

-முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும். கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் வலி குறையும்.

-நொச்சி இலைச்சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

-உடைமர இலை ஒரு கைப்பிடி மற்றும் மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் வலி குறையும்.
அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

-முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்த வெங்காயத்தை அரைத்து கடுகு எண்ணெயுடன் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

-பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் வலி குறையும். புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் வலி குறையும்.

-அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன், எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் வலி குறையும்.

-செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டில் வைத்து கட்டினால் மூட்டு வலி குறையும். அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட வலி குறையும்.  மூட்டு வலி குணமாக அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

-நிலக் கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட வலி குறையும். எள் (நல்ல) எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு ஒரு கடாயில் ஊற்றி சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை சிறு அளவு சேர்த்து தைலம் பதம் வரும் வரை காய்ச்சி. ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.

-தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

-பச்சை கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசலாம்.

-வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி மற்றும் எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.

-சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும். சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.

-நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும். வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.

இந்த மருத்துவ குறிப்புகளை வீட்டில் தயார் செய்து மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறுங்கள். oint pain ayurvedic treatment

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button