அழகு குறிப்புகள்

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

இன்றை உலகில் பெண்கள் தங்க நகைகளை விடவும் செயற்கை நகைகள் குறித்தே அதிகம் சிந்திக்கின்றனர்.

இன்று பல நிறம் மற்றும் வடிவங்களில் செயற்கை நகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. பலர் இதற்காக அதிக பணம் செலுத்துகின்றனர்.

அவ்வாறு அதிகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றவைகளை உரிய முறையில் பராமரிக்கவும் வேண்டும்.

அதற்கமைய அதிக பெறுமதியிலான இந்த செயற்கை நகைகளை நீண்ட காலமாக பாதுகாக்க என்ன செய்யலாம்?

இந்த நகைகளில் வாசனை திரவங்கள் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்

வாசனை திரவங்களில் உள்ள இரசாயனப் பொருட்கள் செயற்கை நகைகளின் அழகை கெடுக்கும். அது நகையின் வண்ணத்தை சிதைக்கும். செயற்கை நகைகளில் கற்களின் பிரகாசத்தில் பாதிப்பு ஏற்பட்டு பிரகாசம் குறையும்.

குளிக்கும் போது நகை அணிவதனை தவிர்க்கவும்

நீண்ட நேரம் நகையில் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பட்டால் நகைகள் சீக்கிரம் சேதமடைந்து விடும். எனவே இவ்வாறான செயற்கை நகைகள் பயன்படுத்தும் போது, நீர் படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

செயற்கை நகையை சுத்தம் செய்வது எப்படி?

வெதுவெதுப்பான தண்ணீரில் மாத்திரம் செயற்கை நகைகளை சுத்தம் செய்வதனை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நகையில் அழுக்கு படிந்தால், மென்மையான துணியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மென்மையான துணியில் சவர்க்காரத்தை சேர்த்து நகையை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த உடனே நகையை காய வைக்க வேண்டும்.

நகையை அடிக்கடி எடுத்துப் பாருங்கள்

 

நகைகளை பயன்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடி எடுத்து பாருங்கள். அப்போதே சேதம் ஏற்பட்டிருந்தால் கண்டுபிடிக்க முடியும். நகைகள் சேதமடைவதற்கு முன்னர் கண்டுபிடிக்கவும் இப்படி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.keerththu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button