தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

பெண்கள் பெரிதும கவலைக் கொள்ளும் விஷயங்களில் முதலில் இருப்பது கூந்தல் தான். கவலை வந்தால் கூந்தல் உதிரும், அதேப்போல் கூந்தல் உதிர்ந்தால் மனக்கவலை வரும். இவ்வாறு கவலையும், கூந்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. அதிலும் பெண்களுக்கு அழகுத் தருவதில் முதலிடம் வகிப்பது கூந்தல் தான். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்ந்தால், பெண்கள் தங்களின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல் வருத்தப்படுவர். ஆனால் என்ன தான் உடலில் ஏதாவது குறைவு தோன்றினாலும், கூந்தலில் குறைவு எற்பட்டால், அது மொத்த அழகையே கெடுத்துவிடும். அந்த அளவு பெண்கள் கூந்தல் மீது ஆசை வைத்துள்ளனர். அத்தகைய கூந்தலை உதிராமல், வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே உதிர்தலைத்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வழிகள்: * சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தை நன்கு அரைத்து ஜூஸ் பிழிந்து, அந்த சாற்றை சூடேற்றாமல், அப்படியே முடியின் வேர்ப்பகுதிகளில் தடவ வேண்டும். முக்கியமாக இந்த சாற்றை தடவுவதற்கு முன், சூடான தண்ணீரில் நனைத்த துணியை அரை மணிநேரம் தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயச் சாறு எளிதில் தலையில் இறங்கி கூந்தல் உதிர்வதைத் தடுக்கும்.

பூண்டை நன்கு நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை எடுத்து, கூந்தலின் வேர்ப் பகுதியில் படும்படி தேய்த்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்வது குறைந்து, கூந்தலும் நன்கு வளரும்.

பீர் வைத்து கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம் என்று கூறியதும், பீரை வாங்கி அடித்துவிட்டு, பின்னர் கூந்தல் வளரவில்லை என்று கேட்க வேண்டாம். பீரை வைத்து பட்டுப்போன்று கூந்தலை வளர்க்கலாம். அதற்கு வெங்காயச்சாற்றுடன், ஒரு கப் பீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, கூந்தலில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் உதிராமல், பட்டுப் போன்று வளரும்

* குளிக்கும் போது ஷாம்புவை கப்பில் போட்டு, அதை பீரால் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, பட்டுப் போல் மின்னும்.

பீர் என்று சொன்னதும் ஆண்கள் பலர் இதை படித்துப் பார்த்திருப்பீர்கள். இந்த முறை பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆகவே பீர் குடிக்கும் போது முற்றிலும் குடித்துவிடாமல், சிறிது கூந்தலுக்கு என்று வைத்து உபயோகித்தால், “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல் தான்.hair care tips

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button