மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க.. தைராய்டு பிரச்னை… தவிர்க்க வேண்டியதும்… சேர்க்க வேண்டியதும்..

தைராய்டு… உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கின்றன.

தைராய்டு பிரச்னை
இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிகுறிகள்
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்கும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை குறையும், ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

காரணம்
உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. குறிப்பாக, ஹைப்போதைராய்டு என்பது அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது. இவர்கள் அயோடின் சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அயோடின் சத்துக்காக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதால் உடலில் அயோடின் அதிகமாகச் சேர்ந்து, ஹைப்பர்தைராய்டு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியான உணவுகளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவு வகைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

சேர்க்க வேண்டிய உணவுகள்

பால்
நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

யோகர்ட் (Yogurt)
தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்.

இறைச்சி
உடலில் துத்தநாகச் சத்து குறைபாட்டால் ஹைப்பர் தைராய்டிஸம் ஏற்படுகிறது. கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியில் அதிகஅளவு துத்தநாகச் சத்து உள்ளது. இதுதவிர சமையலுக்கு சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

முட்டை
ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவு தேவையான அயோடின் சத்து கிடைக்கச் செய்கிறது. மேலும், முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று.

தானியங்கள்
தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பாஸ்ட் ஃபுட்
இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட் ஃபுட் முக்கிய உணவாகிப்போய் விட்டது. பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில் பாஸ்ட்ஃபுட்டில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது போதுமான அளவு அயோடின் சத்துகள் கொண்டதாக இருக்காது.

ஜங்க் புட்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும்.

பேக்கரி உணவுகள்
பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

சல்பர் உணவுகள்
சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்…

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.566561631726731264 n 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button