மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க..ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!

ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்… போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன.

அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.

ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்… போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
“சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?”

“பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும்.

அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்சனைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’

13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”201710241213322876 problems can lead to irregular menstruation SECVPF 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button