மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கிட்னி பழுதடைய என்ன காரணம்? அதை பாதுகாப்பது எப்படி?

இதயம், கண், மூளை போன்ற முதன்மையான உறுப்புகளில் கிட்னியும் ஒன்று. கிட்னியில் முதன்மையான வேலை ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றுதலே.

நாம் சாப்பிடும் உணவு பொருட்கள், எடுத்து கொள்ளும் நீரின் அளவு ஆகியவையே கிட்னியில் கல் உருவாக காரணமாக உள்ளது.

மேலும் இந்த கற்கள் உருவாக முக்கியமாக உள்ள சில விஷயங்கள் என்ன என்று அறிந்து அதனை தவிர்த்து கிட்னியை எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மாத்திரைகள்
உடலின் ஏற்படும் சிறு வலிக்காக அதிகமான மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருவதால் கிட்னி சீக்கிரமாக சிதைவடைந்துவிடும். எனவே அதிகமாக மாத்திரைகள் உபயோகிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிக இனிப்பு
இனிப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்பட கூடும். குறிப்பாக வெள்ளை பிரட், செயற்கை இனிப்பூட்டி பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

உப்பு
ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். மேலும் இந்த அளவை விட அதிகமான உப்பை சேர்த்து கொண்டால் கிட்டினியை பாதித்து விடும்.

தூக்கமின்மை
இரவில் தாமதமாக தூங்கி காலையில் சீக்கிரமாக எழுதல் போன்ற தூக்கத்தின் கால மாற்றம் மாறினால் கிட்டினியும் பாதிக்குமாம். மேலும் ஒரு மனிதனின் உடலை சீராக வைத்து கொள்ள உதவுவது நிம்மதியான தூக்கமே.

கால்சியம் நிறைந்த உணவுகள்
உடலில் கால்சியம் குறைவாக இருந்தால் அது ஆக்சலேட் கற்களை உருவாக்கி விடும். எனவே, கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.

தண்ணீர்
கிட்னியை வலியோடு வைத்து கொள்ள வேண்டாம் என்றால் தினமும் 3 லிட்டர் நீர் குடியுங்கள். இதுவே சிறுநீரகத்திற்கு சிறந்த மருந்தாகும்.

மதுபழக்கம்
தினமும் மது அருந்துபவர்களுக்கு விரைவிலே சிறுநீரகம் சிதைவடைய கூடும். எனவே முடிந்த அளவு மதுவை அதிகமாக அருந்தாமல் இருப்பது நன்று.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால்
நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காருவதால் கிட்னி பாதிக்கப்படும் மற்றும் மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் ஏற்படுமாம்.

பதப்படுத்தபட்ட இறைச்சி
கோழியின் கல்லீரல், மாட்டின் கல்லீரல் போன்றவை கிட்டினியை பாதிக்க செய்யும். மேலும் முட்டை போன்றவற்றையும் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.800.668.160.90 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button