சரும பராமரிப்பு

அவசியம் படிக்க..உடலில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் தெரியுமா?

உடலியல் ரீதியாக அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள் ஆகும்.

சில நேரம் இந்த அரிப்பு இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். ஆனால் அதுவே பல நேரம் எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
  • அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், உடலின் வெளியில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலுக்குள் தோன்றும் அரிப்பு என்று 2 வகையை மருத்துவம் பிரித்து வைத்துள்ளது.
  • செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள், கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் அரிக்க தோன்றும்.
  • குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளமை, பிட்டத்தில் அரிப்பு மற்றும் ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்ற காரணத்தினால் அரிப்பு ஏற்படலாம்.
  • சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகள், துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு போன்றவற்றால் அலர்ஜியாகி, அரிப்பு ஏற்படலாம்.
  • வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள், குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • செல்லப் பிராணிகளான பூனை போன்ற விலங்கினங்களின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகும்.
  • முதுமையில் ஏற்படும் அரிப்பிற்கு தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.

 

அரிப்பு வெளிப்படுத்தும் நோய்கள்
  • சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை காரணமாக அரிப்பு ஏற்படும்.
  • ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம்.
  • உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
  • நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு, பித்தப்பை பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை போன்றவை நோய்களின் அறிகுறியாக அரிப்பு தென்படும்.maxresdefault 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button