ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது, சிக்கன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்ககூடாது, என்று பலரும் சொல்லி கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அதெல்லாம் ஃபுட் பாய்சன் ஆவதற்கு வாய்ப்பில்லை.
food poison
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவே நமக்கு ஆபத்தாக மாறும். பெரும்பாலும் பலரும் விரும்பும் உணவாக இருப்பது எண்ணெய் உணவாக தான் இருக்கும். எண்ணெயிலிருந்து தான் பிரச்னை ஆரம்பிக்கும். அப்பொருளை சாப்பிடும் முன் எண்ணெய்யில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதை சாப்பிட வேண்டாம்.
அதேபோல் நம்மிடம் தான் ஃபிரிட்ஜ் உள்ளதே என்று பிரோலில் துணி அடுக்குவது போல் உணவை அதில் அடுக்கி வைக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து சாப்பிடுங்கள், மீதமுள்ளதை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுங்கள். அதில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்தே சமைக்க வேண்டாம்.
புரதம் அதிகமுள்ள பொருட்கள் எல்லாம் எளிதில் கெட்டுப்போக கூடியவை. வேர்கடலை, பால், எண்ணெய் உணவு வகைகள் எல்லாம் சீக்கிரமே கெட்டுப்போக கூடியவை. அதனை சேர்த்து வைத்து சாப்பிட்டாலே பாதிப்பு ஏற்படும்.
எந்த ஒரு ஸ்நாக்ஸ் பொருட்களாக இருந்தாலும் அதனுடைய எக்ஸ்பைரி தேதியை பாருங்கள். அதனை பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முடிந்தவரை வீட்டில் தயார் செய்யும் ஸ்நாக்ஸ் பொருட்களையே கொடுக்கவும்.

மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுபோகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்றவற்றையில் உடனடியாக தாக்கும், அதனாலேயே உணவுகள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புதிகம்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதில் பூஞ்சைகள் இருப்பது தெரிய வந்தால், அதனை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவர். ஆனால் அப்படி பயன்படுத்தினாலும் உணவு கெட்டுபோவதற்கு வாய்ப்புள்ளது.

இவை போன்றவைகளை தவிர்த்தாலே உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button