ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுமருத்துவ குறிப்பு

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். ஆனால் உலகின் அதிக சத்து வாய்ந்த காய்கறிகளில் ஒன்றும் பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி

செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.

Bitter gourd

கருச்சிதைவு

கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

மருந்துகளை பாதிக்கும்

பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

இதய துடிப்பு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

பெரும்பாலான குழந்தைகள் பாகற்காய் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு காரணம் அதன் சுவைதான். பாகற்காய்க்கு நடுவில் இருக்கும் விதைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. இதனால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு பாகற்காய் அலர்ஜிகளை ஏற்படுத்துமெனில் அவர்களை பாகற்காய் சாப்பிட கட்டாயப்படுத்தாதீர்கள்.

ஹைபோக்ளெகெமிக் கோமா

ஹைபோக்ளெகெமிக் கோமா என்பது அதிகளவு இன்சுலின் இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் மோசமான நிலையாகும். இதனால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதீதமாக குறைக்கும். ஹைபோக்ளெகெமிக் கோமா என்பது எதிர்மறை நரம்புத் துவக்கத்திற்கான ஆரம்பமாகும். இது இதயத்தில் ஏற்படும் மோசமான பாதிப்பாகும். இதற்கு காரணம் அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது.

கல்லீரல் பாதிப்பு

கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதர்க்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

குளுக்கோஸ் -6-பாஸ்பேட் டீஹைட்ரோஜினஸ் (G6PD) பற்றாக்குறை

G6PD பற்றாக்குறை உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடும்போது அது அவர்களுக்கு பேவிஷம் என்னும் நோயை உண்டாக்குகிறது. பேவிஷம் என்பது இரத்தத்தில் கட்டிகள் ஏற்படுவது, தலைவலி, காய்ச்சல், தொடர்ச்சியான வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். பாகற்காய் விதைகளில் உள்ள வேதிப்பொருட்கள் இந்த பிரச்சினையை அதிகம் உண்டாக்கக்கூடியவை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button