ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

ld2206பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் இருக்கும். இது தவறினாலோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தாலோ, அதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்து விட்டது என்றால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் அது பிரச்னை. உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை பார்க்க வேண்டும்.

மாதவிடாய் தவறிப்போவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் காரணமாக உடலின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. இதனால் மருத்துவரை ஆலோசித்து உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு வர முடியும். திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதப்படுத்தும். பணிபுரிபவர்களுக்கு இரவு ஷிப்ட், பகல் ஷிப்ட் என்று மாறி, மாறி அமைந்தால் மாதவிடாய் சுழற்சியும் மாறும். முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது.

சில மருந்துகளின் பக்க விளைவாக மாதவிடாய் சுழற்சி மாறும். பக்க விளைவுகளற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உண்ணலாம். அளவுக்கு அதிகமான உடல் எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றிவிடும். சிலருக்கு மாதவிடாயை நிறுத்திவிடும். அவர்களுக்கு எடை குறைந்தால் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம். இந்த காலகட்டத்தில் மாதவிடாய் லேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் காணப்படும்.

மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இனி மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்கக்கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. இவை தவிர, கர்ப்பமாக இருப்பதால் மாதவிடாய் தவறி இருக்கலாம். மாதவிடாய் தவறியதற்கு அல்லது சுழற்சி மாறுபடுவதற்கு, மாதவிடாயில் வித்தியாசம் ஏற்பட்டால் உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்று குணம் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு இரவு ஷிப்ட், பகல் ஷிப்ட் என்று மாறி, மாறி அமைந்தால் மாதவிடாய் சுழற்சியும் மாறும். முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button