பெண்கள் மருத்துவம்ஆரோக்கியம்

பெண்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் தெரியுமா?…

பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.

எந்தெந்த வயதில் பெண்களுக்கு இதயநோய் வரும்

15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.

இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம்.

கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.

heart ATTACK

25 முதல் 45 வயது வரை: திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு, நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

வேலை செய்யும் பெண்கள், குழந்தைகள் பெற்றவுடன், உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகம், குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகியவற்றால், மன உளைச்சல், படப்படப்பு ஏற்படும். குடும்ப பாரம்பரிய வியாதி இருந்தால், அதுவும் வரலாம்.

45 முதல் 65 வயது வரை: குடும்ப சுமை, பிள்ளைகள் படிப்பு, எதிர்கால சுமை, பொருளாதார தடுமாற்றம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை தாங்க முடியாத பெண்களுக்கு, எளிதில் ரத்த அழுத்தம், சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்படும் உறுப்புகளின் செயலிழப்பு. மார்புவலி, மாரடைப்பு, கார்டியோ காமயோபதி வர வாய்ப்புகள் உண்டு.

65 முதல் 85 வயது வரை: இந்த வயதில் 80 சதவீதத்தினர், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, அதிக எடை, அதிக கொழுப்பு, இடுப்பின் அளவு அதிகரித்து, தொப்பை ஏற்பட்டு மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய் ஏற்படும்.

இவர்களிடம் ஏற்படும் கோளாறுகள்:

தொப்பை போடுதல், இடுப்பின் அளவு 90 செ.மீ.,க்கு மேல் அதிகரித்தல், டிரை கிளிரிரைடு 150ஐ தாண்டுதல், எச்.டி.எல்., என்ற நல்லக்கொழுப்பு 40எம் கீழ் குறைதல், ரத்த அழுத்தம் 130/85க்கு மேல், வெறும் வயிற்று சுகர் 110க்கு மேல் இருத்தல்.

இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு. இதனால், மார்பு வலியும், மாரடைப்பு இதய வீக்க நோய் ஏற்பட்டு, நிரந்தர நோயாளியாகி விடுகின்றனர். அடுத்த வரும் நோய்: தைராய்டு சுரப்பு குறைதல்.

இது 45 வயது முதல் ஆரம்பமாகி விடுகிறது. இதனால், சுறுசுறுப்பு இல்லாமை, அதிக தூக்கம், அதிக எடை, அலுப்பு, சலிப்பு, அதிக கொலஸ்ட்ரால் உருவாகி, இதய நோய் ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button