உடல் எடையை குறைக்கும் முட்டை!….

பொதுவாக குண்டானவர்கள் இளைக்க நிறைய உடற்பயிற்சிகள், முயற்சிகள், சிரமங்களை மேற்கொள்வார்கள். ஆனால் இவர்களால் சாப்பாட்டை மட்டும் கட்டுப்படுத்தவே முடியாது.

காரணம் இவர்கள் தினமும் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள். இதனால் உடற்பயிற்சி செய்து கழித்த கலோரிகளை விட இவர்கள் சாப்பிடுவதால் ஏற்றப்படும் கலோரிகள் மிகவும் அதிகம்.

இதனால் இவர்கள் வயிற்றை அடைத்துக்கொண்டு இனிமேல் சாப்பிட முடியாதபடி ஒரு உணவும் இருக்கவேண்டும். அதே சமயம் அது கலோரி நிறைந்த உணவாகவும் இருக்க கூடாது. கொழுப்பு நிறைந்த உணவாகவும் இருக்கக்கூடாது. இந்த வகையில் முட்டை தான் சிறந்த உணவு.

காலையில் சாப்பிடும் டிபன் உடன் இரண்டு அல்லது ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்துவிட்டோமானால் அன்றைய நாள் முழுக்க வயிறு நிறைந்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் நொறுக்குத் தீனி மேல் கவனம் செல்லாது. நம் உடலை நாம் விரும்பியவாறு வளைத்து நெளித்துவிடலாம்.

அதே சமயம் முட்டையில் புரதம் மிக அதிகமாக உள்ளது. இதிலுள்ள புரதச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புகள், தசைகள் பலம் பெறும். உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டுக்கோப்பான அழகைப்பெற இந்த முட்டைதான் காரணம்.

எனவே முட்டை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்ற எண்ணத்தை மறந்து தினந்தோறும் ஒரு முட்டையாவது சாப்பிடலாம்.

Leave a Reply