ஆரோக்கியம் குறிப்புகள்

எப்போதும் கவலைப்படுகிறீர்களா? சிறப்பான தீர்வு!…

மனிதர்களில் பலருடைய தினசரி வேலையே கவலைப்படுவதுதான். எதிர்காலம் குறித்து 40 சதவிகிதமும் இறந்த காலம் குறித்து 30 சதவிகிதமும் நோய் குறித்து 10 சதவிகிதமும் தங்களை மீறிய விஷயங்கள் குறித்து 20 சதவிகிதம் கவலைப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

sad

எதிர்காலம் குறித்த பயங்களில் பெரும்பான்மை நடப்பதே இல்லை. அதனால் இந்தக் கவலை தேவை இல்லாதது. இறந்த காலம் குறித்த கவலைகளால் மாற்றக்கூடியது எதுவுமே இல்லை. அதனால் இதுவும் வீண் கவலையே.

நோய்கள் குறித்த கவலையைத் தீர்க்க சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று கவலையை தீர்த்துக்கொள்ள முடியும்.மற்ற கவலைகள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை என்பதால்… அதற்கென கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கவலைப்படுவதால் உடலின் எதிர்ப்பாற்றல் குறைவதுடன் மன அழுத்தமும் உண்டாகிறது. நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் கவலையை விரட்டிவிட முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button