அழகு குறிப்புகள்

உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.. பராமரிப்புக்கள்…

உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும்.

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்.

lip

உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் தான் ஏற்படுகிறது.

கோடைகாலங்களில் உதடுகள் வறட்சி அடையாமல் இருக்க அதிக அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது.மேலும் கோடைகாலங்களில் பழச்சாறும் நன்கு அருந்த வேண்டும்.
மேலும் உதட்டிற்கு பல கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் களை அதிகம் பயன்படுத்த கூடாது. உதடுவெடிப்புகள் அதிகமாக இருந்தால் மிகவும் காரமான உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிக அளவில் எரிச்சல் ஏற்படும்.

எனவே உதடு வெடிப்பினை சரி செய்ய பல தீர்வுகள் உள்ளது.உதடு வெடிப்பினை எவ்வாறு இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி சரி செய்வது என்பதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

நெல்லிக்காய் சாறு :

இயற்கை நமக்கு அளித்த முக்கிய மருத்துவ குணமிகுந்த கனி தான் நெல்லிக்காய். இந்த கனியில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை நாம் தினமும் ஜூஸாக அருந்தி வந்தால் நமது உடலுக்கும் மிகவும் நல்லது.அதேபோல் நமது உதட்டிற்கும் மிகவும் நல்லது.

நெல்லிக்காய் சாறு மற்றும் தேனை சமஅளவு எடுத்து நன்கு கலந்து உதட்டில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர உதடு வெடிப்பு நீங்கி உதடு அழகு பெறும்.

கேரட் :

கேரட் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்து உள்ள காய்கறி.இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. கேரட்டை உணவில் தினமும் எடுத்து கொண்டால் அது கண்களுக்கு மிகவும் நல்லது.

கேரட் சாறுடன், சிறிதளவு கிளிசரின் மற்றும் பசும் பாலாடை சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி வர வெடிப்புகள் குணமாகி உதடு மிகவும் அழகாக மாறும்.

தேன் :

தேன் நமது உடலுக்கு ஒரு சிறந்த உணவாகவும்,மருந்தாகவும் பயன்படுகிறது. தேனில் அதிகஅளவு ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளது.

எனவே தேனை தினமும் உதட்டில் பூசி வர உதடு வெடிப்புகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் உதடுகளில் ஏற்படும் வறட்சிகள் தடுக்கப்படுகிறது.மேலும் உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

கற்றாழை :

கற்றாழை நமது உடலுக்கு மிகவும் பொலிவினை ஏற்படுத்தும் ஒரு அருமருந்தாகும். இதுபல சரும பிரச்சனைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பல அறிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

கற்றாழை ஜெல்லை தினமும் உதட்டில் பூசி வர நாளடைவில் வெடிப்புகள் குணமாகி உதடு மிளிரும்.

நல்லெண்ணெய் :

நல்லெண்ணய் பல அறிய மருத்துவ குணங்களை நமது உடலுக்கு தரவல்லது. மேலும் இது நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரவல்லது.வாரம் 2 முறை நல்லெண்னையை உடலில் நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர உடல் சூடு தணியும்.

ரோஜா இதழ் :

மலர்களின் ராஜா என அழைக்கபடும் ரோஜா நமது உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது.எனவே தான் ரோஜா சருமத்தின் ஏற்படும் பல பிரச்சனைக்ளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ரோஜா இதழ்களை பாலுடன் சேர்த்து அரைத்து தினமும் உதட்டில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி வர வெடிப்பு நீங்கி உதடு அழகாகவும் ,பளபளப்பாகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button