ஆரோக்கியம் குறிப்புகள்

விழிப்புணர்வு பதிவு.!! மாதவிடாய் நேரத்தில் பருத்தி உறிபஞ்சுகளை உபயோகம் செய்வது நல்லதா?

மாதவிடாய் நேரத்தில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வரும் சானிடரி நாப்கின்கள் காரணமாக கர்ப்பப்பையின் வாயில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சானிட்டரி நாப்கின்கள் வேதிப்பொருட்களின் மூலமாக தயாரிக்கப்படுவதால் அதிகளவு தீங்கை ஏற்படுத்தும். சானிட்டரி நாப்கின்களை உபயோகம் செய்யும் பெண்களுக்கு போதியளவு விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக., சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து உபயோகம் செய்வதன் மூலமாக அரிப்பு., தோல் கருப்படித்தால்., அலர்ஜிகள் மற்றும் இறுக்கமான ஆடைகள்., வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் நேரத்தின் போது நான்கு மணிநேரத்திற்கு ஒரு நாப்கின் என்ற வீதத்தில்., நான்கு நாப்கின்களை பயன்படுத்த வேண்டும்.

இன்றுள்ள நிலையில் பெண்கள் காலை முதல் இரவு வரை ஒரே நாப்கின்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இன்றுள்ள பொருளாதார ரீதியில் நாப்கின்களின் விலைக்கும்., ஏழ்மையான பெண்களின் நிலைக்கும் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து நாப்கின்கள் சாத்தியமானது கிடையாது.

மாதவிடாய் நேரத்தின் இரத்தப்போக்கை உறிஞ்சுக்கொள்வதற்கு உறிபஞ்சுகள் பயன்படுகிறது. இதன் காரணமாக மாதவிடாய் நேரத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்பட இயலும். உறிபஞ்சுகளை உபயோகம் செய்வது தனிநபரின் விருப்பமாகும். சந்தையில் செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டு தயார் செய்யப்பட்ட உறிபஞ்சுகள்., இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து கிடைக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் இரத்த கசிவின் சமயத்தில் வெளியாகும் இரத்தத்தை சேமிப்பதற்கும்., சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவதாக இருக்கும் நிலையில்., சானிட்டரி நாப்கின்கள் பிளாஸ்டிக்கினால் தயார் செய்யப்படுகிறது. இது சுற்றுசூழலுக்கும் – பெண்களின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த சானிட்டரி நாப்கின்களை பதிலாக உறிபஞ்சுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இனி காண்போம். பருவமடைந்த பெண்கள் சுமார் 12 வயதுடையவர்கள் முதல் 50 வயது வரை கொண்ட பெண்கள் வரை இதனை உபயோகம் செய்யலாம். கைகளை நீரில் சுத்தமாக கழுவிவிட்டு., மாதவிடாய் பஞ்சை எடுத்து கொண்டு., கால்களை விரித்து உறிபஞ்சை பிறப்புறுப்பில் செலுத்தி., மாதவிடாய் நிகழ்ந்த பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த இரத்தத்தை உறிஞ்சுள்ள பஞ்சை கழிவறையில் போடாமல்., பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். பிறப்புறுப்பில் இருக்கும் பஞ்சானது அசௌவுகரியத்தை ஏற்படுத்தும் பட்சத்தில்., சரியாக பஞ்சு செலுத்தப்படவில்லை என்பது அர்த்தம்.. இந்த சமயத்தில் பஞ்சை எடுத்துவிட்டு., புதிய பஞ்சை எடுத்து உபயோகம் செய்ய வேண்டும். பஞ்சு சரியாக உட்செலுத்தப்படாமல் இருந்தால் இந்த அசௌகரியமானது இருக்கும்.

பஞ்சு தன் இடத்தில் சரியாக இருந்தால் எந்த விதமான அசௌகரியமும் ஏற்படாது. பெரும்பாலும் உபயோகம் செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக., மாதவிடாய் உறிபஞ்சுகளை உபயோகம் செய்யும் பழக்கத்தில் உள்ள தயக்கத்தை கைவிட்டு., அதற்கான விழிப்புணர்வை பெற்றாலே பெரும்பாலான பிரச்சனைகள் குறைந்துவிடும். 688cc5333db370c0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button