சரும பராமரிப்பு

இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

மருவை சருமத்தில் கூடுதலாக ஏற்படக்கூடிய திசுக்களின் கூட்டு என்றும் சொல்லப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் இருப்பதும், தடிமனான அணிகலன்கள் கழுத்தில் அழுத்துவதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைப்படுவதும் ஆகும்.

இதனை வீட்டிலே சரி செய்து கொள்ள முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் பருவில் தடவிவர வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.

iiioityutyuygu கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும்.

சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.

இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.
அம்மான் பச்சரிசி மூலிகையில் பெறப்படும் பாலை தினமும் மருவின் மீதும் முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் முகப்பரு மற்றும் மருக்கள் காணாமல் போகும் கொஞ்சம் அதிகமாக பால் எடுத்து நிறைய மருக்கள் உள்ளபகுதிகளில் தடவினால் முகப்பருக்களோடு சேர்ந்து மருவும் சென்று விடும். தடயமும் மறைந்து விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button