ஆரோக்கியம் குறிப்புகள்

உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கைக் குறைப்பதற்காக, தூசகற்றும் வெற்றிட குழல்களைப் (Vaccum Cleaner) பயன்படுத்தி இரத்தத்தை உறிஞ்சும் அதிர்ச்சியூட்டும் போக்குக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார், ஒரு பெண் மருத்துவ நிபுணர்.

இந்த வாரம் வைரலாகச் சென்ற ஒரு ட்வீட்டில், சியாட்டலிலிருந்து ஒரு செவிலி, அவர் வேலை செய்யும் மருத்துவமனையில், இந்த வாரம் மட்டும், தூசகற்றும் வெற்றிட குழல்களைப் பயன்படுத்தி தங்கள் மாதவிடாயை முடிக்க முயற்சிக்கும் இரண்டு வழக்குகளைப் பார்த்ததாக பதிவிட்டிருந்தார். @OdesseyT99 என்ற பெயரில் ட்வீட் செய்த அந்த செவிலி, இந்த பயங்கரமான போக்கை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அனைவரது கவனத்திற்கும் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்த்தார். அவரிட்ட அந்த சுட்டுரைப் பதிவில் பின் வருமாறு கூறினார்.
40d5e43b9f714dcdcd
பெண்களே, உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள். இதைப் பயன்படுத்துவதால், வழக்கமான இரத்தப்போக்கை விடப் பன்மடங்கு இரத்த இழப்பு நேரிட வாய்ப்புள்ளது. இந்த செய்கையினால் இந்த வாரம் மட்டும் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதை உடனடியாக நிறுத்துங்கள், என்று கூறினார். அடுத்தடுத்து வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், இந்த செய்முறையை முயற்சி செய்தது, 19 மற்றும் 23 வயது பெண்கள் எனவும், இதைச் செய்ததால், அவர்கள் அதிர்ச்சி நிலைக்குச் சென்றுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர், எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், அவர்கள் பயன்படுத்தியது, யூரேகாவா, டைசனா, ஹூவரா, அல்லது வேறு ஏதும் வால்மார்ட் பிராண்டா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஆம், அது வீடுகளைச் சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் ஒரு உண்மையான தூசகற்றும் வெற்றிடக்குழல் தான். உங்கள் மாதவிடாயில் நடக்கும் இரத்த இழப்பு, உங்கள் உடல் வாகு, உடலின் தன்மை, மற்றும் நோக்கங்களையும் பொறுத்தே நடக்கிறது. மேலும், அந்த இரத்தப்போக்கு உங்களால் பொறுத்துக் கொள்ளத்தக்க வகையில் அமைகிறது. வெற்றிடக்குழலைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முற்பட்டால், வழக்கமாக இருக்கும் இரத்தப்போக்கை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இரத்த இழப்பு ஏற்பட்டு, உங்கள் உடல் அதைத் தாங்க இயலாமல், அதிர்ச்சி நிலைக்குச் செல்கிறது, என்று கூறினார்.

இந்த குழப்பமான போக்கைக் கண்டு பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உண்மையிலேயே பெண்கள் இவ்வாறான முறைகளைக் கொண்டு மாதவிடாயை நிறுத்த முயல்கின்றனர் என்பதைப் பலராலும் நம்ப இயலவில்லை.

இதைப் பற்றி, தி கைனே மையத்தின், மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் ஆலோசகராகப் பணிபுரியும் டாக்டர் அலெக்ஸ் எஸ்கேண்டர் கூறுவதாவது, இவ்வாறான செய்கையினால், தொற்று உட்பட தீவிர சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார். மேலும் அவர், உங்களின் மாதவிடாயை தள்ளிப்போட வேண்டுமென்றால், உங்கள் மருத்துவரை அணுகி அதற்கு வேண்டிய மருந்துக்களை உட்கொள்ளலாம். உங்கள் மாதவிடாய் ஏற்கனவே துவங்கியிருந்தால், வலிகளைக் குறைக்கும் மருந்தை உட்கொண்டால், இரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். அதை விடுத்து, இவ்வாறான முயற்சியை மேற்கொள்ளுதல் பேராபத்தை விளைவிக்கும், என்று கூறினார்.

வாக் இன் கைன் கேரின் நிறுவனர், அத்ரீத்தி குப்தா, இத்தகைய நடைமுறைகள் புதிதல்ல என்றும். மென்ஸ்ட்ருயல் எக்ஸ்ட்ராக்க்ஷன் (Menstrual Extraction) என்ற பெயரில் 1970களிலிருந்து இந்த நடைமுறைகள் நிலவிக்கொண்டுள்ளது, என்றும் கூறுகின்றார்.

அக்காலத்தில் பெண்கள், டெல் எம் (Del Em) என்ற சாதனத்தைப் பயன்படுத்தி மென்ஸ்ட்ருயல் எக்ஸ்ட்ராக்க்ஷன் செய்முறையை மேற்கொண்டனர். இது ஒரு ஜாடி, ரப்பர் ஸ்டாப்பர், குழாய், ஒரு வழி வால்வு, சிரிஞ்ஜ், வடிகுழாய் மற்றும் அடைப்பான் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சாதனம் ஆகும். வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம், இந்த சாதனம், கருப்பையிலிருக்கும் விஷயங்களை, கருப்பையின் வாயில் மூலமாக வெளிக்கொணர்கிறது. சட்டவிரோதமான செயலாக கருக்கலைப்பு கருதப்பட்ட காலத்தில், இந்த சாதனத்தைப் பயன்படுத்தி, கருக்கலைப்பு செய்முறையை நிகழ்த்தினர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள், வரவிருக்கும் விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க, அல்லது கடுமையான வலியைத் தவிர்ப்பதற்காக, இந்த மென்ஸ்ட்ருயல் எக்ஸ்ட்ராக்க்ஷன் முறையைப் பயன்படுத்துகின்றனர், என்கிறது MIC அறிக்கை.

மருத்துவரின் பரிந்துரைகள் அல்லாது, மருந்துகளையோ, அல்லது நடைமுறைகளையோ பின்பற்றக்கூடாது என்று எவ்வளவு உரைத்தாலும், அதன் தீவிரத்தன்மையை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, பேராபத்தை விளைவிக்கும். நண்பர்களே, இவ்வாறான முயற்சிகளை ஒரு பொழுதும் மேற்கொள்ள வேண்டாம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button