ஆரோக்கியம் குறிப்புகள்

வெங்காயம் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராமல் வெட்ட ஆசையா?

வெங்காயம் நறுக்கினால் கண்களில் இருந்து வெளிவருவதற்கு, வெங்காயத்தில் கண்களுக்கு எரிச்சலைத் தரும் நொதிப்பொருள் ஒன்று உள்ளது. அந்த நொதிப் பொருள், காற்றில் கலந்து, கண்களை சேர்வதால் தான், கண்களில் இருந்து தண்ணீர் வருகிறது. எனவே இத்தகைய பிரச்சனைக்கு தீர்வே இல்லையா என்று கேட்கலாம். இதற்கு நிச்சயம் தீர்வு உள்ளது.

இந்த உலகில் பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கு நிச்சயம் தீர்வு என்ற ஒன்றும் இருக்கும். அதுப் போலத் தான், வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமல் இருப்பதற்கும், ஒருசில வழிகள் உள்ளன.

அத்தகைய வழிகளை பின்பற்றி வந்தால், வெங்காயம் நறுக்கும் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். சரி, அத்தகைய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
sharpknife 600

கூர்மையான கத்தி
வெங்காயத்தை நறுக்கும் போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வராமல் இருக்கும்.

தண்ணீர்
வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்துக் கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, பின் அதனை எடுத்தும் வெட்டலாம். இதனாலும் கண்ணீர் வராமல் இருக்கும்.
22 1363956555 onions in water 600

ஃப்ரிட்ஜ்
வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். ஆகவே வெங்காயம் வெளியேற்றும் திரவம் போன்ற நொதியானது காற்றில் கலக்காமல் இருக்கும். இதனால் கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

ஃபேன்
வெங்காயம் வெட்டும் போது, ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து நறுக்கினால், அதிலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து கண்களை அடையாமல், ஃபேன் சுற்றுவதால் வெளியே தள்ளப்பட்டுவிடும்.

ஓடும் நீர்
வெங்காயத்தை தண்ணீரை திருப்பி விட்டு, அதில் வைத்து வெட்டினாலும் கண்ணீர் வராது.

வினிகர்
வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால், வினிகர் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் நொதிகளை அழித்துவிடும்.

உப்பு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து, நறுக்கினாலும் அழுவதைத் தடுக்கலாம்.

மெழுகுவர்த்தி
வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெங்காயம் நறுக்கினால், வெங்கயாத்திலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து, கண்களை கலங்க வைப்பதற்கு முன், மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் வெப்பக்காற்றானது தடுத்துவிடும்.

சூயிங் கம்
நிறைய மக்கள் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டு, வெங்காயத்தை நறுக்கினால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம் என்று சொல்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button