ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களுக்கு வயது அதிகமாகும்போது 5 முக்கியஊட்டச்சத்துக்கள் ..

குடும்பத்தின் ஆதாரமாக இருப்பது பெண்கள்தான். எனவே அவர்களின்ஆரோக்கியம் என்பது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவிஷயமாகும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்றைய காலத்தில்அவர்களை பராமரிப்பதற்கு அவர்களுக்கு உண்மையிலேயே நேரமில்லை. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் எலும்புப்புரை நோய்(ஆஸ்டியோபோரோசிஸ்), நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய் மற்றும்இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும், பெண்களின் உடல்நலத்திற்கு வரமாக அமைந்துள்ள ஐந்து ஊட்டச்சத்துக்கள் இதோ. இறுதி மாதவிடாய் காலத்தில் அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன்அளவு குறைவதால், அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும்வாய்ப்புகள் அதிகம்.

ஐந்து முக்கிய ஊட்டச்சத்துக்கள்
tgiyiuoipio
வைட்டமின்-டி:

வைட்டமின் டி-யில் ஏற்படும் பற்றாக்குறை, எலும்பு முறிவையும் மற்றும் தீவிர நிலையில் எலும்புபுரை நோயையும் உண்டாக்குகிறது. வைட்டமின்-டி, கால்சியம் உடலில் உறிஞ்சபடுதலுக்கு உதவுகிறது. போதுமான அளவு வைட்டமின்-டி எடுத்துக் கொண்டால், எலும்புமுறிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என ஆய்வுகள்தெரிவிக்கிறது. நாம் இந்த வைட்டமினை சூரிய ஒளி தோலின் மீதுபடுவதும் மூலமும், உணவுகளின் மூலமும் மற்றும் பிற்சேர்ப்புகள் மூலமாகவும் பெற முடியும். உணவின் மூலம், வைட்டமின்-டியைபால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் பெற முடியும்.

கால்சியம்:

இறுதி மாதவிடாய் காலத்திற்கான வயது வரும்போது, புதிய எலும்புசெல்கள் உருவாகும் செயல்முறை குறைகிறது. எந்த விதமான எலும்புபிரச்சினைகளையும் தவிர்ப்பதற்காக ஒருவர் கால்சியம் நிறைந்த உணவுகளான, பால், கேழ்வரகு, பிரக்கோலி மற்றும் இதர உணவுகளை உணவு முறைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

smiles

வைட்டமின் பி-12:

பெண்களுக்கு வயது அதிகமாகும்போது வைட்டமின்-பி-12 குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வைட்டமின் குறைபாட்டால் களைப்பு, உடல் எடை குறைவு, மறதி நோய், மனச்சோர்வு, குறைவான நினைவாற்றல் போன்றவை ஏற்படுகிறது. பெரும்பாலும் பல பெண்களுக்கு களைப்பு ஏற்பட்டாலும், அலட்சியத்தினால் அவை வைட்டமின் குறைவால் ஏற்படுகிறது என்று அவர்கள் கண்டறிவதில்லை. மற்றும் நாட்கள் செல்ல அந்த பிரச்சினை அதிகமாகிறது. பொதுவான சைவ உணவு முறைகளில், இந்தவைட்டமின் பி-12 நிறைந்த உணவுகள் அதிகமாக இல்லை, இருப்பினும் யோகர்ட், பாலாடை கட்டி, முட்டை, பால் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஃபோலிக் அமிலம்:

பெண்கள் முதுமை அடையும் போது, அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும் மிக முக்கியமான வைட்டமின், வைட்டமின்-பி தொகுதி ஆகும். இந்த வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய் அறிகுறிகள் இரத்த சோகை, உடல் எடை குறைவு, தலைவலி, களைப்பு மற்றும் இரத்தத்தில் ஹோமோசிஸ்டைன் அளவு அதிகமாக இருப்பதால், இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பச்சை இலைகாய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்:

இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகமாக்கி மற்றும்கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.ஆலிவ் எண்ணெயில் ஒற்றை நிறைவற்ற கொழுப்பு அமிலங்களும் மற்றும் அவற்றின் நன்மை பயன்களும் நிறைந்துள்ளது. மீன், முட்டை, சோயா பீன்ஸ், வாதுமை கொட்டை, கடுகு எண்ணெய் மற்றும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.எனவே பெண்களாகிய நாம் நம்மை கவனிப்பதற்கு தீர்மானம் எடுக்கவேண்டும். அப்பொழுது தான் நம்முடைய அன்பானவர்களைஅக்கறையுடன் நம்மால் கவனித்துக் கொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button