மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?

காய்ச்சலுக்கு உடனடியாக ஆண்டிபயாடிக் கொடுக்காதீர்கள். உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல்.

இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன.

தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.

காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
rtrytytytyty
சளி வெளியேற்ற:

சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 7 எண்ணிக்கை, இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும்.

இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விடவேண்டும். இந்த நீரில் துளசி, கற்பூர வல்லி, வேப்பிலைக் கொழுந்து இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருகவேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button