அழகு குறிப்புகள்

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்


பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன.சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது… என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது.ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள். முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்…டி-சர்ட் பிரா:

 

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? – இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா:

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா:

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா:

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா:

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா:

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா:

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம். இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

201704132011529355 7 34587 L galVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button