ஆரோக்கியம் குறிப்புகள்

உலர்ந்த திராட்சைகளை கர்ப்ப காலத்தின் போது பெண்கள் சாப்பிடலாமா ?

கர்ப்ப காலம் ஒரு பெண்ணை முழுமையடையச் செய்யும். முதன் முதலில் பெண்கள் தங்கள் உடலில் பல வித்தியாசமான மாற்றங்களை சந்திக்கிறார்கள். கர்ப்ப காலத்தின் போது பெண்கள் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு மிகவும் பிடித்த உணவாக இருந்தாலும் அந்த உணவை அவள் தன் குழந்தைக்காக உண்ணலாமா இல்லையா என்பதை யோசித்து உண்ண வேண்டும். பெண் தன் வாழ்க்கையின் மிக பெரிய பொக்கிஷத்தை பாதுகாப்பதற்காக தனக்கு பிடித்த உணவுகளை அவள் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக உலர்ந்த திராட்சைகள் மற்றும் முந்திரிகளை முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு ஆக வேண்டும். மேலும் முந்திரி, பாதாம், வறுக்கப்பட்ட பாதாம், கிரேன் பெர்ரி, திராட்சைகளை சாப்பிடுவது அவசியம். தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் பயனளிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை இவை கொண்டுள்ளன.
rgrg
பல் பராமரிப்பு

எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் உடலை பாதுகாக்க நினைக்கிறார்கள். ஆனால் யாரும் தங்கள் பல் பற்றிக் கவலைக் கொள்வது இல்லை. தினமும் அவர்கள் உண்ணும் உணவும் குடிக்கும் ஜூஸ்களும் வாயில் ஒரு வாசனையை விட்டு செல்கிறது. மேலும் சில பெண்களின் கவனக்குறைவால் ஈறுகளில் இரத்தக் கசிவும் ஏற்படுகிறது. உங்கள் வாயை கவனித்துக் கொள்வது அவசியம் மேலும் வாய் துர்நாற்றத்தால் கூட குமட்டல் ஏற்பட வாய்ப்புள்ளது. உலர்ந்த திராட்சைகளில் ஓலியானோலிக் அமிலம் உள்ளது. இது பற்களை சிதைவு மற்றும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாத்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அளிக்கிறது.

மலச்சிக்கல்

உலர்ந்த திராட்சைகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் உதவியாக இருக்கும். உலர்ந்த திராட்சைகள் தண்ணீரை உறிஞ்சி மலமிளக்கிக்கு உதவுகிறது. மேலும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

இரத்த அணுக்களை உருவாக்குகிறது

கர்ப்ப காலத்தின் போது வளர்ந்து வரும் சிசுவிற்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதால் பெண்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள். உலர்ந்த திராட்சைகளில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளதால் இவை உடலில் உள்ள ஹீமோகுளாபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.இதனால், உலர்ந்த திராட்சைகள் இரத்த சோகை வராமல் தடுத்து இரத்த அணுக்களை உற்பத்திச் செய்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது

பொதுவாக கர்ப்ப காலத்தின் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும், சில மாற்றத்தின் போது சில பிரச்சினைகளும் உண்டாகக் கூடும். இதில் புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் உலர்ந்த திராட்சைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது புற்றுநோய் உருவதற்கு காரணமான செல்கள் ஆகும்.

செரிமானத்தை எளிதாக்குகிறது

உலர்ந்த திராட்சைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இரைப்பைக் குழாயை சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உணவின் தேவையை அதிகரிக்கிறது. அதிக அளவு உணவு உண்பது குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. வளர்ந்து வரும் கருப்பை அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது, இதனால் மற்ற உறுப்புகள் சிறிய இடத்தைக் கொண்டுள்ளதால் செரிமானம் ஒரு பிரச்சினையாக மாறிவிடுகிறது. ஆனால் உலர்ந்த திராட்சைகளில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அமிலத்தன்மையைக் குறைத்து உணவை எளிதில் ஜீரணிக்கிறது.

உயர் ஆற்றல்

திராட்சைகளின் காய்ந்த வடிவமே உலர்ந்த திராட்சைகளாகும். இதில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கொண்டுயுள்ளது. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து அத்தியாவசிய வைட்டமின்களை உறிஞ்சி உடலுக்கு அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாவதால் தாய் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்க உலர்ந்த திராட்சைகள் உதவுகிறது. மேலும் திராட்சைகள் உடலின் நோயெர்திப்பு சக்தியை அதிகரிக்கிறது. இத்துடன் பிரசவத்தின் போது தேவையான உடல் வலிமை பெற உதவுகிறது.

கருவின் கண்பார்வை

கரு பொதுவாக தனது உறுப்புகளின் வளர்ச்சி முதல் எல்லாத் தேவைகளுக்கும் அம்மாவையே சார்ந்து இருக்கும். எனவே பெண்கள் தனது கர்ப்பகாலத்தில் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவது கருவிற்கு நல்ல கண்பார்வையை பெற உதவும். மேலும், கருவின் பிறப்பு குறைபாடுகளை குறைப்பதில் உலர்ந்த திராட்சைகள் முக்கியபங்கு வகிக்கிறது.

வலுவான எலும்புகள்

உலர்ந்த திராட்சைகளில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கர்ப்பகாலத்தில் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோயால் சில பெண்கள் பாதிக்கபடுகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உலர்ந்த திராட்சைகளை மிதமான அளவில் உட்கொள்ளுதல் நல்லது.

கர்ப்ப காலம் என்பது ஒரு அழகான அனுபவமாகும். பெண்கள் தங்கள் உடம்பையும் தங்கள் குழந்தையின் உடம்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிய உலர்ந்த திராட்சைகள் இதற்கு பெரும் உதவியாக இருப்பது நல்லது. எனவே மிதமான அளவில் உட்கொண்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button