ஆரோக்கியம் குறிப்புகள்

இத படிங்க தயாரிப்பில் கலக்கும் நிறுவனம் `காபியைக் குடியுங்கள், கப்பையும் சாப்பிடுங்கள்!’

தனிமனிதன் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கு எமனாகவும் கால்நடைகளுக்கு எதிரியாகவும் பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கும் வகையிலும் இருக்கின்றன. தமிழகத்தில் `பிளாஸ்டிக் பொருள் தடை’ அமலில் உள்ளது.

பிளாஸ்டிக்

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடையைக் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்வதற்கு முன், அதற்கு மாற்றான பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்பதை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க, புதிய கப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூடான அல்லது குளிர்ந்த பானங்களை இதில் ஊற்றிப் பயன்படுத்திவிட்டு, பின்பு அந்தக் கப்பை அப்படியே சாப்பிடலாம். இந்தக் கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
rth
`முழுக்க முழுக்க இயற்கை தானியங்களைக் கொண்டு இந்த கப் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், எந்தவிதத் தயக்கமும் இன்றி, இதைச் சாப்பிடலாம்’ என இந்தக் கப்பைத் தயாரித்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி உருவாக்கியுள்ள இந்த கப்புக்கு `ஈட் கப்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம், “மரங்களை வெட்டுவது மற்றும் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு மாற்றாகவும் அதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த கப் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் இயக்குநர் அசோக்குமார், “ஈட் கப், இயற்கை தானியங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது.
ஈட் கப்

மேலும், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளுக்கு மாற்றான ஒரு முயற்சி. சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மாற்றான ஒரு முன்னெடுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

இந்த `ஈட் கப்’பைப் பொறுத்தவரை, சூடான, குளிர்ந்த பானங்கள், சூப், தயிர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நீராகாரங்களை ஊற்றும்போது, சாதாரண கப்புகளைப்போல 40 நிமிடங்கள் வரை குழையாமல், மொருமொருப்பு தன்மையுடன் அப்படியே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்கை மற்றும் பூச்சுக் காரணிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் பயன்படுத்தப்படும் நீராகாரங்களின் சுவை `ஈட் கப்’பால் ஒருபோதும் மாறாது எனவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button