ஆரோக்கியம் குறிப்புகள்

மாணவிகளின் அவஸ்தை இது `இனி பீரியட்ஸ் அப்போ ஸ்கூலுக்கு போகமாட்டேன்!’

மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை, மாதவிடாயைக் கடக்கத் தேவையான நாப்கின்கள் கிடைக்காமை போன்றவைதான் குழந்தைகள் அந்நாள்களில் வீட்டில் முடங்கிவிடக் காரணமெனக் கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, மாதவிடாய் குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தபிறகும்கூட, இதில் உள்ள சிக்கல்கள் அகலவே இல்லை எனக் கூறியுள்ளனர் செயற்பாட்டாளர்கள்.
பள்ளி மாணவி

இந்த நிலையில், மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் பள்ளிகளும் உரிய ஆதரவு தருவதில்லை. நாப்கின் இருப்பு வைத்திருந்து மாணவிகளின் அவசரத்துக்கு வழங்குவது, கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்டவற்றைச் செயல்படுத்துவதில், தனியார் பள்ளிகளிலும் போதாமையே நிலவுகிறது. இந்தப் பிரச்னையின் இன்னொரு முகத்தை, தன் புரிந்துணர்வற்ற செயலால் உலகுக்குக் காட்டியிருக்கிறது இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி.

சம்பந்தப்பட்ட பள்ளியின் 11 வயது மாணவி ஒருவருக்கு, அவரின் மாதவிடாய் காலத்தில் கழிவறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி முடித்து குழந்தை வீடு திரும்பியபோது கறைபடிந்த ஆடையோடு வந்ததாகவும், `இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே ஒரு முறை இப்படி நடந்துள்ளது’ என்றும், பிரிஸ்டோலைச் சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் வேதனைப்பட்டுள்ளார் குழந்தையின் அம்மா.
மாதவிடாய்
yt
தன் பெயரையோ குழந்தையின் பெயரையோ வெளியிட விரும்பாத அந்தத் தாய், பத்திரிகையாளர்களிடம், “கடந்த முறை இப்படியான நிகழ்வு நடந்தபோது, என் மகள் நீளமான மேல்சட்டையும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். ஆகவே, மேல் சட்டையின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்துவிட்டாள். அன்றைய தினமே, பள்ளியைத் தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் தெரிவித்தேன். இனியொரு முறை இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக அவர்கள் சொன்னார்கள்.

ஆனால், இப்போது பாருங்கள்… மீண்டும் கறை படிந்த துணியோடு என் மகள் வீடு வந்து சேர்ந்துள்ளாள். வகுப்பு நேரத்தில், கழிவறை செல்லக் கூடாதென்பது அப்பள்ளியின் விதிமுறையாம். எவ்வளவு அவசரமென்றாலும் அனுமதி தரப்படாது என்கின்றனர் ஆசிரியர்கள். இது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையன்றி வேறென்ன? `இனி மாதவிடாயின்போது நான் பள்ளிக்குப் போகமாட்டேன்’ என்கிறாள் என் மகள்.
மாதவிடாய்

என் மகளின் மாதவிடாய் காலம் தொடங்கி சில மாதங்கள்தான் ஆகின்றன. மாதவிடாயின் தொடக்க காலத்திலுள்ள குழந்தைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வைத் தர வேண்டுமே தவிர, அவர்களை பயமுறுத்தக் கூடாது. குழந்தைகள் ஏற்கெனவே மாதவிடாயை `அழுக்கு, தவறு, வலி’ என்றெல்லாம் தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்.

அப்படியானவர்களுக்கு இப்படியான சம்பவங்களும் நிகழ்ந்தால், மனதளவில் முழுவதுமாகத் துவண்டுவிடுவார்கள். மாதவிடாய்க்கான விழிப்புணர்வை அதிகப்படுத்தும் பொறுப்பு, ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது. அவர்களே இப்படிச் செய்தால் என்ன செய்வது? என் மகளைப்போல, ஆயிரக்கணக்கான குழந்தைகள் அப்பள்ளியில் உள்ளனர். என்னுடைய குரல், அவர்களுக்கானதும்தான்” எனக் கூறியுள்ளார்.
சிறுமி பயின்ற பள்ளி
drdrf
பள்ளித் தரப்பில், `இந்நிகழ்வுக்காக வருந்துகிறோம். மீண்டும் இப்படி நடக்காது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளியில் மட்டுமே நிகழ்ந்த பிரச்னை அல்ல இது. உலகில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் மாதவிடாய் நாள்களில் வகுப்பறைக்கும் கழிவறைக்கும் இடையில் தவிக்கும் மாணவிகளின் அவஸ்தை இது. பள்ளித் தரப்பும் ஆசிரியர்களும் பெண் பிள்ளைகளின் இந்தப் பிரச்னையில் அதிக புரிந்துணர்வோடும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்இந்தப் பள்ளியில் மட்டுமே நிகழும் பிரச்னை அல்ல இது.

சிறுமிகளின் மாதவிடாய்ப் பிரச்னை தொடர்பான வெளிப்புறக் காரணிகளைக் குறைக்கும் பொறுப்பில் இருக்கும் அவர்கள், அதை இன்னும் தீவிரமாக்குவதற்கான காரணங்களை உருவாக்குபவர்களாக இருக்கக் கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button