மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா? ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டது. அசுத்தமான காற்று ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த அபாயகரமானது.

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் எப்போதுமே அசுத்தமான இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், ஆஸ்துமாவை தூண்டும் காரணிகளைக் குறித்து அவசியம் தெரிந்து, மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டுமின்றி, உணவுகளாலும் தூண்டப்படும். அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஆஸ்துமா பிரச்சனையை மோசமாக்கும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்து, ஆஸ்துமாவில் இருந்து விலகி இருங்கள்.

பால் பொருட்கள்

ஆஸ்துமா நோயாளிகள் பால் பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் ஆஸ்துமாவை தூண்ட வாய்ப்புள்ளது. அதுவும் பால் பொருட்களான ஐஸ் க்ரீம், யோகர்ட், சீஸ் போன்றவை ஆஸ்துமாவை தூண்டக்கூடியவை. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் பால் பொருட்களை எடுத்தால் ஏற்படும் பொதுவான சிக்கல்களாவன இருமல் மற்றும் தும்மல் ஆகும்.
tuyuuuuy

ஆஸ்துமாவைத் தூண்டும் சில பொதுவான உணவுகள்

முட்டைகள், சிட்ரஸ் பழங்கள், கோதுமை மற்றும் சோயா பொருட்கள் போன்றவை ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும். எனவே ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுப் பொருட்கள் தங்களது டயட்டில் இருந்து நீக்குவதே நல்லது. சிட்ரஸ் பழங்கள் மிகவும் நல்லது. ஆனால் முடி உருவாக்கத்தினால் சிலருக்கு ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். அதேப்போல் சோயா பொருட்கள் மற்றும் கோதுமையும் சில சமயங்களில் ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் மட்டுமின்றி, அனைவருமே தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் உட்கொண்டால், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் இதர உட்பொருட்கள் அலர்ஜியை தூண்டிவிடும். குறிப்பாக அடிக்கடி ஆஸ்துமாவினால் கஷ்டப்படுபவர்கள், இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சளியைத் தேக்கும் உணவுகள்

வாழைப்பழம், பப்பாளி, அரிசி, சர்க்கரை மற்றும் தயிர் போன்றவை உடலில் சளியை உருவாக்கும் உணவுகளாகும். மேலும் காபி, டீ, சாஸ் மற்றும் மது பானங்கள் போன்றவை எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால், அது ஆஸ்துமா தாக்கத்தை ஏற்படுத்தும்.

நட்ஸ்

நட்ஸ் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான். இருப்பினும் நட்ஸை ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால், அது தீவிரமாக்கி, நிலைமையை மோசமாக்கும். எனவே நட்ஸ்களில் இருந்து விலகியே இருங்கள்.

பாஸ்ட் ஃபுட்

ஆஸ்துமாவின் நிலைக்கு பாஸ்ட் ஃபுட்டின் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொண்டால், அது ஆஸ்துமாவின் தீவிரத்தை இரு மடங்கு ஆக்குவது தெரிய வந்தது. குறிப்பாக இந்த விளைவு குழந்தைகளிடம் அதிகம் காணப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button