தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு சிம்பிளான 5 டிப்ஸ் கூந்தல் வளர்வதோடு நல்ல பலனும் கிடைக்கும்

பெண்கள் பொதுவாக அழகான, நீண்ட கூந்தலைத்தான் விரும்புவார்கள்.

எனவே சில எளியவழிமுறைகளை பின்பற்றி வந்தால் நீண்ட கூந்தல் வளர்வதோடு நல்ல பலனும் கிடைக்கும். அந்த வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.

அழகுக் கலையில் கூந்தலுக்கு தனி இடம் உண்டு. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தலைமுடியில் கவனம் செலுத்தாதவர்கள் மிகச் சிலரே. தமிழ் இலக்கியம் தொட்டு, நவீன சினிமாப் பாடல்கள் வரை கூந்தல் அழகை வர்ணிப்பதன் ரகசியம் இதுவே!yutyu 1

How To Reduce Hair Loss: முடி அடர்த்தியாக வளர டிப்ஸ்

அப்படி அழகான கரும் நிற, கார்மேகக் கூந்தலுக்கான டிப்ஸ் இங்கே:

1. முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து தேய்த்துவர முடி வளர ஆரம்பிப்பதை காண்பீர்கள்.

2. சிகைக்காய் பவுடருடன் சாதம் வடித்த நீரைக் கலந்து தலையில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். இதை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

3. சிறிது ஆலிவ் எண்ணெய் எடுத்து அதை சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்து வர முடி அடர்த்தியாக வளரும்.

4. விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான உணவுகளை உண்பதும் கூந்தல் வளர்ச்சியைத்துாண்டும். எனவே கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்து தலையில் தினம் தேய்த்து வர வேண்டும். அதே போல் வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button