ஆரோக்கியம் குறிப்புகள்

கை கால் குடைச்சல் வர காரணங்கள் தெரியுமா?

நமது உடலில் சில நேரம் எங்கு வலி இருக்கின்றது என்று சரியாகச் சொல்லத் தெரியாமல் கை கால்கள் குடைந்து கொண்டே இருக்கும்.

☆ கை, கால் குடைச்சல் வருவதற்கான காரணங்கள்:

▪ முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் ஏற்படக்கூடும்.

▪ ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தல்.

217042644bc5e05ce15fb6535373bb90d1055a3a51141764640

▪ கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைபாடு.

▪அளவுக்கு அதிகமாக வேலை பளு மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் மற்றும் மன உளைச்சல்.

▪ மாதவிலக்கு, தாய்மை அடைதல், ரத்தசோகை ஆகியவையும் காரணமாகும்.

☆ கை கால் குடைச்சல் வருவதற்கான அறிகுறிகள்:

▪ காலின் அடிப்பகுதியில் எரிச்சல் பின்னர் முழங்கால் வரை அதிகரிக்கும்.

▪ இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற உணர்வுகள், மரத்து போதல்.

▪ சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலி பெண்களுக்கு இடுப்பு வலி, தலைவலி மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button