ஆரோக்கியம் குறிப்புகள்

அப்படி என்ன ஸ்பெஷல்? தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால்

காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக ஆரோக்கியமான இதர பானங்களைக் குடிப்பவரா?

அதிலும் உங்களுக்கு அதிகாலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியானால் இனிமேல் நீங்கள் குடிக்கும் எலுமிச்சை ஜூஸ் உடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து குடியுங்கள்.

பொதுவாக எலுமிச்சை ஜூஸ் பல்வேறு நன்மைகளை உடலுக்கு வாரி வழங்கும். அத்துடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து குடிக்கும் போது நன்மைகள் இரட்டிப்பாகும். குறிப்பாக நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தாலோ, உடலில் உள்ள கழிவுகளை அன்றாடம் வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தாலோ எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

சரி, இப்போது தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று காண்போம்.

நன்மை #1

பொதுவாக மஞ்சள் தூளை நீரிலோ அல்லது எலுமிச்சை ஜூஸிலோ கலந்து குடித்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே தினமும் காலையில் இந்த பானத்தைக் குடித்து ஒரு நாளை தொடங்கினால், உடல் பருமனாவது தடுக்கப்படுவதோடு, உடல் எடையும் குறையும்.

ghijgyu
நன்மை #2

மஞ்சள் தூள் கலந்த எலுமிச்சை ஜூஸைக் குடித்தால், பித்த நீரை உற்பத்தி செய்யும் திறன் மேம்படும். ஒருவரது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பித்த நீர் மிகவும் இன்றியமையாதது. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தும்.

நன்மை #3

உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு கல்லீரல் பித்த நீரைப் பயன்படுத்துகிறது. மேலும் பித்த நீர் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கிடையில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடல் ஆரோக்கியத்திற்கான pH அளவைப் சரியாக பராமரிக்க உதவுகிறது. அதோடு எலுமிச்சை ஒரு இயற்கையான நீர்ப்பெருக்கி பொருள். ஆகவே இது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரில் வழியே வெளியேற்றும்.

தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
நன்மை #4

ஒருவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கும், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவதற்கும் காரணம் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதம் தான். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலை ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மஞ்சள் மற்றும் எலுமிச்சையில் அதிகம் நிரம்பியுள்ளன.

நன்மை #5

உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கட்டயாம் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் சேர்த்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் அழற்சி எதிர்ப்பு பண்பு, நாள்பட்ட அழற்சி கோளாறான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் பிரச்சனையின் அறிகுறியை எதிர்த்துப் போராடி தடுக்கும்.

நன்மை #6

மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் போன்ற பண்புகள் நிறைந்துள்ளது. இத்தகைய மஞ்சளை வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து குடிக்கும் போது, உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவதில் இருந்து விடுபடலாம்.

நன்மை #7

பல்வேறு ஆய்வுகளில், மஞ்சளில் உள்ள உட்பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றன. ஆனால் எந்த அளவில் எடுப்பது என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க நினைத்தால், தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

நன்மை #8

ஒருவர் மஞ்சளை உட்கொள்ளும் போது, அது மூளையில் இருந்து பெறப்படும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகத் தோன்றும் ஒரு ஹார்மோனான நியூரோட்ரோபிக் காரணியின் அளவை அதிகரிப்பதன் மூலம், நியூரான்களின் சீரழிவைத் தடுக்கிறது. இதனால் அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தடுக்கும். மேலும் மஞ்சளில் உள்ள குர்குமின் நினைவாற்றலை மேம்படுத்தும். எனவே உங்கள் மூளை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட நினைத்தால், எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து தினமும் காலையில் குடியுங்கள்.

நன்மை #9

ஒருவர் தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கும் போது, சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, சருமம் அழகாக காணப்படும். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முதுமை செயல்முறையை தாமதப்படுத்தும். எனவே நீங்கள் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button