ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க வேண்டுமா? சோறு வடித்த கஞ்சி மட்டும் போதுமே!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் கவலையே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான்.

இதற்காக பலரும் டயட், உடற்பயிற்சி என பலவித முயற்சிகளை கையாண்டு பார்ப்பார்கள், ஆனால் நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் சோறு வடித்த கஞ்சி எடையை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சோறு வடித்ததும் சூடான தண்ணீருடன் உப்பு, மிளகுத்தூள் கலந்து குடிக்கலாம், இதனால் வயிறு நிறைந்து சாப்பிட்ட உணர்வு கிடைக்கும்.

சாதம் சாப்பிட்டால் 600- 1000 கலோரிகள் அதிகரிக்கும், ஆனால் இதை குடிக்கும் போது வெறும் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும்.

உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன், உடல் நீர் வற்றுவதிலிருந்தும் பாதுகாக்கிறது.0.900.160.90 3

மற்ற பயன்கள்
  • கஞ்சியுடன் புதினா, சீரகப்பொடி கலந்து குடித்தால் செரிமான சக்தி பெருகும்.
  • கஞ்சியுடன் சிறிது வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • திராட்சை பழங்களை சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் இறந்த செல்கள் நீங்கும், முகம் பளபளப்பாகும்.
  • குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரைமணிநேரம் கழித்து கழுவ வேண்டும், இப்படி செய்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
  • இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
  • வயிற்றுப்போக்கால் அவதிப்படும் போது மோர் கலந்து சாப்பிடுவது நீர் இழப்பை ஈடு செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button