மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்!!!

மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் சிலருக்கு வேப்பிலையின் ஒருசில முக்கியமான நன்மைகளைப் பற்றி தெரியாது. இதில் உள்ள நன்மைகளால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கோடைகாலம் வரப்போகிறது. மிகவும் ஆபத்தான நோயான அம்மையின் தாக்கத்திற்கு பலர் உட்பட நேரிடும். ஆனால் அந்த அம்மை நோய்க்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள். ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், நோயெதிர்ப்பு அழற்சி, பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் இருக்கிறது. எனவே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணமாக்கும்.

இங்கு அனைவரும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் சில சிறப்பான நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை வேப்பிலை கொண்டு குணமாக்கிக் கொள்ளுங்கள்.

சின்னம்மை
சின்னம்மை இருக்கும் போது, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரைக் கொண்டு குளித்தால், சின்னம்மையின் தடிப்புக்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படும்.

தொண்டைப்புண்
தொண்டையில் புண் இருந்தால், அதனை விரைவில் குணமாக்க, வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால், கொப்பளிக்க வேண்டும்.

கண் பராமரிப்பு
கண் புரையை சரிசெய்ய வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் கண்களை கழுவ வேண்டும். குறிப்பாக வேப்பிலையை நீரில் போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, பின் குளிர வைக்க வேண்டும். இந்த நீரைக் கொண்டு எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள கண்களைக் கழுவினால் உடனே குணமாகும்.

பூச்சிக்கடி
பூச்சிக்கடியால் ஏற்பட்ட தடிப்பை சரிசெய்ய, வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பூச்சிக்கடி உள்ள இடத்தில் தடவி வந்தால், அவ்விடத்தில் உள்ள விஷம் மற்றும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வீக்கம் குறைந்துவிடும்.

நாள்பட்ட மூட்டு வலி மூட்டு வலி அதிகம் இருந்தால், அப்போது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வலி உள்ள இடத்தில் தடவினால், மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, வலியும் குறைந்துவிடும். மேலும் முதுகு வலி இருந்தால், அப்போது வேப்பிலை பேஸ்ட் கொண்டு மசாஜ் செய்தால், முதுகு வலி பறந்து ஓடிவிடும்.

மலேரியா வேப்பிலையில் மலேரியா காய்ச்சலைப் போக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், மலேரியா உடனே குணமாகும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் மலேரியாவை சரிசெய்ய இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள்.

சரும பராமரிப்பு வேப்பிலையைப் பயன்படுத்தி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களைத் தடுக்கலாம். மேலும் வேப்பிலை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிப்படுத்தும்.

கூந்தல் பராமரிப்பு வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவற்றை தடுக்கலாம்.

Related posts

வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடமான உடல் பிரச்சனைகள்!!!

nathan

பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம்

nathan

அந்த நேரத்தில் பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

nathan
Live Updates COVID-19 CASES