ஆரோக்கியம் குறிப்புகள்

ஹெல்த் ஸ்பெஷல்.. அபார்ஷன் செய்தால் ஏற்படும் விளைவுகள்

கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது.

கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற டயலமாவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், காம்ப்ளிகேஷன்கள் அதிகமாகி விடுகிறது.

சரி. கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

* கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.

* கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்..

* ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.
* கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.
ugiuyi
* கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.

* கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.

கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை.

* அதிகப் படியான வயிற்றுவலி.

* காய்ச்சல்.

* பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான பிளீடிங் இருந்தால்,

* கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button