தலைமுடி சிகிச்சை

பாட்டி வைத்திய முறையை பயன்படுத்தலாம் வாங்க! இளநரை மற்றும் செம்பட்டையிலிருந்து முடி கருப்பாக மாற வேண்டுமா?

உணவுப்பழக்க வழக்கம் மற்றும் கூந்தலின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் முடி செம்பட்டையாக மாறிவிடுகிறது. சிலருக்கு ஜீன் மற்றும் மன அழுத்தம் காரணமாக இளவயதிலே நரைமுடி வந்துவிடுகிறது. இதன் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறிய வயதிலே முகத்தோற்றம் வயதானது போல் காட்சியளிக்கும். இனி இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான பாட்டி வைத்திய குறிப்பு முறைதான் இது.
சரி இப்போது நெல்லிக்காய் ஹேர்- டை செய்வது எப்படி என்பதை இதில் காண்போம் .

185077693e11c0209827e7c65d8d4c8b74e1fe6b73758256892374199679

ஹேர்- டை செய்ய தேவையான பொருட்கள்:

மருதாணி இலை – 20 இலைகள்

பெரிய நெல்லி – 5

வெந்தயம் – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – 10 இலைகள்

செம்பருத்தி இலை – 10 (தேவையென்றால்)

தயிர் – 2 ஸ்பூன்

வெங்காயச்சாறு -2 ஸ்பூன்

கற்றாழை – 2 ஸ்பூன்

கடுக்காய் பொடி – 4 ஸ்பூன்

பீட்ரூட் சாறு- 4 ஸ்பூன்

விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்

103475897306e51ae592999ae976c37a51c27ac521205181290377116624

மருதாணி இலை, செம்பருத்தி இலை,கறிவேப்பிலை இலை ஆகியவற்றை சுத்தமாக கழுவி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு இதை அரைத்து பொடியாக்கிக் கொள்ளலாம். இதனுடன் வெந்தயத்தை தனியாக அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

1297383353f9d2aa070b4107c88d40771b18ddf6f6689075640114142040

பின்பு பெரிய நெல்லியை கொட்டை நீக்கி அதை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

சிறிதாக இருக்கும் இரும்பு வாணலியை இதற்கு உபயோகப்படுத்தலாம். இதில் அரைத்துள்ள மருதாணி, கறிவேப்பிலை,செம்பருத்தி ,கடுக்காய் பொடியை ஒன்றாக்க சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் தயிர், மசித்த கற்றாழை,பீட்ரூட் சாறு மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்க வேண்டும். சுமார் 8 மணி நேரம் வரை இதை ஊற வைக்கலாம்.

13464203710cc73d535966588ae702979b0e2dab0868013286190198730

எப்படி அப்ளை செய்யலாம்?

  • உங்கள் கூந்தலை நன்றாக சிக்கில்லாமல் சீவிக் கொள்ளவும். பின்பு தயாரித்து வைத்திருக்கும் இயற்கையாக தயாரித்து வைத்திருக்கும் ஹேர்- டையை உங்கள் முடியின் வேர்க்கால்கள் வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
  • பின்பு முடியை தனித்தனியாக பிரித்து இந்த கலவையை அப்ளை செய்ய வேண்டும். முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
  • தலை முழுக்க கூந்தலில் இதை தடவிய பிறகு சீப்பை வைத்து கூந்தலை வாரி முடியை மேலே எடுத்து கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்பு முடியை அலச துவங்கலாம்.

​தலையை அலசுங்கள்:

  • குளிர்ந்த நீரில் அலசாமல், மிதமான நீரில் இதை அலசிக் கொள்ளலாம். முதலில் கொஞ்சமாக நீர் தெளித்து டை அனைத்து முடிகளிலும் படுமாறு அலச வேண்டும். ஷாம்ப்பூ பயன்படுத்தி கழுவுவதை தவிர்த்து விடுங்கள்.
  • ஏதாவது பயன்படுத்தி தலையை அலச வேண்டும் என நினைத்தால் நீங்கள் சோற்றுக்கற்றாழையை மசித்து தலைக்கு தடவி அலசிக் கொள்ளலாம். பின்பு தலையை நன்றாக உலர வைத்துக் கொள்ளுங்கள்.
  • வாரம் ஒருமுறை செய்தால் போதும், நீங்கள் அதிகமாக மெனக்கெட தேவையில்லை. ஒருமாதம் பாலோ செய்தால் உங்கள் கூந்தல் கருப்பாக மின்ன தொடங்கிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button