ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இத தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க… தூக்கம் வராம அவஸ்தைப்படுறீங்களா?

சராசரியாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை தூங்கியே செலவழிக்கிறார்கள் என்பது தெரியுமா?

ஆம் இது முற்றிலும் உண்மை மற்றும் அவசியமும் கூட. ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், பல நோய்களின் அபாயம் குறைவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.

இஸ்ரேலில் உள்ள பார்-இலன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், தூக்கத்தின் ஒரு புதுமையான மற்றும் எதிர்பாராத செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆய்வில் தூக்கம் மற்றும் தூக்க கலக்கத்தால் மூளையின் செயல்திறன், முதுமை மற்றும் பல்வேறு மூளைக் கோளாறுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கினார்கள். அதுவும் உயிருள்ள ஒரு ஜீப்ராஃபிஷ்ஷில் 3டி டைம்-லேப்ஸ் இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒற்றை நியூரான்களுக்கு அணுசக்தி பராமரிப்பை செய்வதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதையும் காட்டினர்.
gggh
இந்த ஆய்வை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்டது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தூக்கத்தின் பங்கானது குரோமோசோம் இயக்கவியலை அதிகரிப்பது மற்றும் ஒவ்வொரு நியூரான்களிலும் டி.என்.ஏ சேதத்தின் அளவை இயல்பாக்குவது. மேலும் டி.என்.ஏ பராமரிப்பு செயல்முறை விழித்திருக்கும் நேரத்தில் போதுமானதாக இல்லை எனவும், போதுமான தூக்கம் அதற்கு மிகவும் அவசியம் எனவும் ஆராய்ச்சியார்ளகள் கூறுகின்றனர்.

இன்று உலக தூக்க தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை ஒவ்வொருவரும் போதுமான தூக்கத்தைப் பெறுவதற்கும், தூக்கமின்மையைப் போக்குவதற்கும் சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை ஒருவர் அதிகம் உட்கொண்டால், தூக்க பிரச்சனை நீங்கி, நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.
vdggg
பாதாம்
பாதாம் மெலடோனின் என்னும் ஹார்மோனுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த ஹார்மோன் தான் தூக்க முறையை ஒழுங்குபடுத்துகிறது. எனவே நீங்கள் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், மாலை வேளையில் ஒரு கையளவு பாதாமை சாப்பிடுங்கள். இதனால் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் மெலடோனின், செரடோனின் மற்றும் மக்னீசியம் போன்ற தூக்கத்தை ஊக்குவிக்கும் உட்பொருட்கள் ஏராளமான அளவில் அடங்கியுள்ளன. ஆகவே தினமும் பகல் நேரத்தில் ஒரு கையளவு வால்நட்ஸை நொறுக்கினால், இரவில் தடையில்லாத நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்களில் மெலடோனின், ட்ரிப்டோஃபேன், பொட்டாசியம் மற்றும் செரடோனின் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளன. மேலும் இந்த பழத்தில் பாலிஃபீனால்களும் ஏராளமாக உள்ளது. இது இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டி, உடலுக்கு தேவையான ஓய்வைப் பெற உதவும்.

பால்

இரவு தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைப் பருகினால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். பாலில் ட்ரிப்டோஃபேன், கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெலடோனின் போன்ற உட்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் நல்ல தூக்கத்தை மேம்படுத்தும் உட்பொருட்களாகும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ மனதை ரிலாக்ஸ் செய்வதோடு, அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெற உதவும். பல வருடங்களாக நம் முன்னோர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்க சீமைச்சாமந்தி டீயைத் தான் பருகி வந்தார்கள். எனவே நீங்களும் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், ஒரு கப் சீமைச்சாமந்தி டீயைக் குடியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button