எடை குறைய

எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்

[ad_1]

நீங்கள் உடல் எடையால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? இதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்ததில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் எப்போதுமே ஒன்றைப் பெற நினைக்கும் போது கடுமையாக செயல்படுவதை விட, ஸ்மார்ட்டாக செயல்பட்டால், நிச்சயம் அதனை விரைவில் பெற முடியும்.எனவே உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்காமல், சிம்பிளான வழிகளைத் தேடுங்கள். உங்களால் தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. மாறாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அதே சமயம் விலைக் குறைவிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

அதற்கு அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே tamil beauty tips.com உடல் எடையைக் குறைக்க உதவும் விலைக் குறைவில் கிடைக்கும் சில இந்திய உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

1. சிறுதானியங்கள் 

சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.

2. பாசிப்பருப்பு 

பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும். எனவே சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதிலாக பாசி பருப்பை பயன் படுத்தலாம் 

3. மஞ்சள் 

அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.

4. மோர் 

மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது

5. தேன் 

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.

6. முட்டைக்கோஸ் 

முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

7. கடுகு எண்ணெய் 

சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.

8. பூண்டு 

பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.

9. ஓட்ஸ் 

ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆற்றலையும் தருவதால், இதனை அன்றாடம் காலை உணவாக எடுத்து வருவது நல்லது.

10. தக்காளி 

விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

11. முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உட்கொண்டு வந்தால், அவை தொப்பையைக் குறைக்கும். ஆகவே எடையைக் குறைக்க விரும்பும் முட்டை பிரியர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

12. காளான் 

காளான் கூட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த, தொப்பையைக் குறைக்க உதவும் சிறப்பான ஒரு இந்திய உணவுப் பொருள். அதிலும் பட்டன் காளான் தான் கொழுப்புக்களை கரைப்பதில் சிறந்தது.

13. பாதாம் 

ஆய்வு ஒன்றில் பாதாமை மிதமான அளவில் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதாமையும் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

14. கீரைகள் 

கீரைகள் கூட உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் அற்புதமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.

15. கறிவேப்பிலை 

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.

16. ஏலக்காய் 

மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும்.

17. பீன்ஸ் 

வீட்டில் அடிக்கடி செய்யும் பீன்ஸ் பொரியலை உட்கொண்டு வந்தாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.

18. புதினா 

புதினா உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலை அமைதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

19. மாட்டுப் பால் 

கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, தொப்பையும் வருகிறது. எனவே அதற்கு பதிலாக மாட்டுப் பாலை குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பிட்டாகவும் இருக்கும்.

20. மீன் 

இறைச்சிகளை உட்கொள்வதற்கு பதிலாக, மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைப்பதுடன், அதில் கொழுப்புக்களும் குறைவாக உள்ளது.

————–

Nīṅkaḷ uṭal eṭaiyāl atikam avastaippaṭukiṟīrkaḷā? Itaṟkāka niṟaiya muyaṟcikaḷai eṭuttuḷḷīrkaḷā? Iruppiṉum evvita palaṉum kiṭaittatillaiyā? Kavalaiyai viṭuṅkaḷ. Ēṉeṉil eppōtumē oṉṟaip peṟa niṉaikkum pōtu kaṭumaiyāka ceyalpaṭuvatai viṭa, smārṭṭāka ceyalpaṭṭāl, niccayam ataṉai viraivil peṟa muṭiyum.


Eṉavē uṭal eṭaiyaik kuṟaikka kaṭumaiyāka muyaṟcikkāmal, cimpiḷāṉa vaḻikaḷait tēṭuṅkaḷ. Uṅkaḷāl tiṉamum nīṇṭa nēram uṭaṟpayiṟci ceyya muṭiyavillaiyā? Paravāyillai. Māṟāka, kaṭaikaḷil viṟkappaṭum uṇavukaḷai vāṅki cāppiṭuvatait tavirttu, uṭal eṭaiyaik kuṟaikka utavum atē camayam vilaik kuṟaivilum kiṭaikkum uṇavup poruṭkaḷai aṉṟāṭa uṇavil cērttu vāruṅkaḷ.


Ataṟku anta uṇavukaḷ eṉṉaveṉṟu terintu koḷḷa vēṇṭiyatu avaciyam. Eṉavē naṇpaṉ tamiḻ uṭal eṭaiyaik kuṟaikka utavum vilaik kuṟaivil kiṭaikkum cila intiya uṇavup poruṭkaḷai paṭṭiyaliṭṭuḷḷatu. Ataip paṭittu avaṟṟai tavaṟāmal uṅkaḷ uṇavil cērttu vantāl nalla palaṉai viraivil peṟalām.
1. Siru Thaniyangal
ciṟutāṉiyaṅkaḷāṉa kampu, kēḻvaraku pōṉṟavaṟṟil nārccattu atikam niṟaintuḷḷatu. Ittakaiya tāṉiyaṅkaḷai nam muṉṉōrkaḷ atikam eṭuttu vantatāl tāṉ, avarkaḷ uṭal parumaṉ piraccaṉaiyāl avastaippaṭāmal iruntārkaḷ. Eṉavē ivaṟṟai muṭintāl aṉṟāṭa uṇavil cērttu uṭal eṭaiyai kuṟaiyuṅkaḷ.


2. Pasipparuppu 
pācipparuppil kalōri kuṟaivāka iruppatāl, uṭal eṭaiyaik kuṟaikka niṉaippōr, tiṉamum uṇavil itaṉai cērttu varuvatu nallatu. Mēlum itaṉāl uṭalukku vēṇṭiya vaiṭṭamiṉkaḷāṉa ē, ī maṟṟum ci atikam kiṭaikkum. Eṉavē cāmpār ceyyum pōtu tuvaram paruppukku patilāka pāci paruppai payaṉ paṭuttalām 


3. Manjal
aṉaittu vīṭukaḷilum irukkum oru poruḷ tāṉ mañcaḷ. Inta mañcaḷ kūṭa uṭalil taṅkiyuḷḷa koḻuppukkaḷai karaikkum. Ataṟku tiṉaṭum oru ṭamḷar pālil 1 ciṭṭikai mañcaḷ tūḷ cērttu paruka vēṇṭum.


4. Moor 
mōril 2.2 Kirām koḻuppukkaḷum, 99 kalōrikaḷum tāṉ uḷḷatu. Eṉavē ivaṟṟai aṉṟāṭam paruki vantāl, uṭalil koḻuppukkaḷ cērvatu kuṟaivatōṭu, uṭalum ārōkkiyamāka irukkum. Paccai miḷakāy, kottamalli cērttu cāppiṭṭāl mikavum nallatu


5. Then (Honey)
uṭal parumaṉāl avastaippaṭupavarkaḷukku oru ciṟanta maruttuva kuṇam vāynta oru poruḷ tāṉ tēṉ. Ittakaiya tēṉai carkkaraikku patilāka cērttu vantāl toppai kuṟaivatōṭu, carumamum polivōṭu irukkum.


6. Muṭṭaikkose
muṭṭaikkōsil nīrccattu atikam uḷḷatu. Eṉavē ivaṟṟai uṭal parumaṉ uḷḷavarkaḷ uṭkoṇṭu vantāl, toppai vaḷarvatu kuṟaiyum. Atumaṭṭumiṉṟi, aṉṟāṭa uṇavil cērttu vara toppaiyum kuṟaiya ārampikkum.


7. Kadugu ennai
camaikkum pōtu uṇavil vejiṭēpiḷ āyilai cērppataṟku patilāka, kaṭuku eṇṇeyai cērttu vantāl, uṭalil cerimāṉa maṇṭalam cuttamāki koḻuppukkaḷ veḷiyēṟa ārampikkum. Itaṉāl uṭal eṭaiyum kuṟaiyum.


8. Poondu
pūṇṭil calpar atikam iruppatāl, avai koḻuppukkaḷai uṭaiyac ceytu, uṭalil cērvatait taṭukkum. Ataṟku ovvoru muṟai uṇavu uṭkoṇṭa piṉṉarum oru pūṇṭai cāppiṭa vēṇṭum. Ippaṭi paccaiyāka cāppiṭṭāl, itaṉ palaṉ viraivil teriyum.


9. Oats
ōṭsil kalōrikaḷ kuṟaivāka iruppatu maṭṭumiṉṟi, uṭalukku āṟṟalaiyum taruvatāl, itaṉai aṉṟāṭam kālai uṇavāka eṭuttu varuvatu nallatu.


10. Thakkaaḷi 
vilaik kuṟaivil kiṭaikkum uṇavup poruṭkaḷil oṉṟu tāṉ takkāḷi. Ittakaiya takkāḷiyil kalōrikaḷ kuṟaivāka iruppatuṭaṉ, itil nārccattu atikam iruppatāl, itu cerimāṉa maṇṭalattiṟku mikavum nallatu.


11. Muṭṭaiyiṉ veḷḷaik karu
muṭṭaiyiṉ veḷḷaik karuvil purōṭṭīṉ atikam uḷḷatu. Eṉavē itaṉai uṭkoṇṭu vantāl, avai toppaiyaik kuṟaikkum. Ākavē eṭaiyaik kuṟaikka virumpum muṭṭai piriyarkaḷ, muṭṭaiyiṉ veḷḷaik karuvai maṭṭum eṭuttuk koḷḷuṅkaḷ.


12. Kaalaan
kāḷāṉ kūṭa ūṭṭaccattukkaḷ atikam niṟainta, toppaiyaik kuṟaikka utavum ciṟappāṉa oru intiya uṇavup poruḷ. Atilum paṭṭaṉ kāḷāṉ tāṉ koḻuppukkaḷai karaippatil ciṟantatu.


13. Badham
āyvu oṉṟil pātāmai mitamāṉa aḷavil uṭkoṇṭu vantāl, uṭal eṭai kuṟaiyum eṉṟu kaṇṭupiṭikkappaṭṭuḷḷatu. Ākavē pātāmaiyum uṅkaḷ ṭayaṭṭil cērttuk koḷḷuṅkaḷ.


14. Keeraigal
kīraikaḷ kūṭa uṭal eṭaiyaik kuṟaikka peritum utaviyāka irukkum aṟputamāṉa uṇavup poruṭkaḷil oṉṟu. Ēṉeṉil itil kalōrikaḷ kuṟaivākavum, nārccattu, vaiṭṭamiṉkaḷ maṟṟum kaṉimaccattukkaḷ atikam irukkiṟatu.


15. Kariveppilai
aṉaivarum tūkki eṟiyum kaṟivēppilaiyai paccaiyāka tiṉamum kālaiyil veṟum vayiṟṟil cāppiṭṭu vantāl, uṭalil taṅkiyuḷḷa koḻuppukkaḷ maṟṟum ṭāksiṉkaḷ veḷiyēṟiviṭum.


16. Elakkaai 
macālā poruṭkaḷil oṉṟāṉa ēlakkāy cerimāṉa maṇṭalattiṟku mikavum nallatu. Mēlum ēlakkāy uṭaliṉ meṭṭapālicattai atikarittu, uṭalil taṅkiyuḷḷa koḻuppukkaḷai karaikkum.


17. Beans 
vīṭṭil aṭikkaṭi ceyyum pīṉs poriyalai uṭkoṇṭu vantālē uṭal eṭaiyaik kuṟaikkalām eṉpatu teriyumā? Ām, ēṉeṉil pīṉsil uṭal eṭaiyaik kuṟaikkum tiṟaṉ uḷḷatu.
18. Puthina
putiṉā uṭalil taṅkiyuḷḷa tēvaiyaṟṟa naccukkaḷai cuttam ceyya utavuvatōṭu, uṭalai amaitippaṭuttum. Atumaṭṭumiṉṟi, putiṉā vāy turnāṟṟattaiyum taṭukkum.


19. Maattu Paal
kaṭaikaḷil viṟkappaṭum patappaṭuttappaṭṭa pākkeṭ pālai kuṭippatāl uṭal ārōkkiyam pātikkappaṭuvatōṭu, toppaiyum varukiṟatu. Eṉavē ataṟku patilāka māṭṭup pālai kuṭittāl, uṭal ārōkkiyamāka iruppatuṭaṉ, piṭṭākavum irukkum.


20. Meeṉ 
iṟaiccikaḷai uṭkoḷvataṟku patilāka, mīṉai uṭkoṇṭu vantāl, uṭalukku vēṇṭiya purōṭṭīṉ, omēkā-3 ḥpēṭṭi āciṭ kiṭaippatuṭaṉ, atil koḻuppukkaḷum kuṟaivāka uḷḷatu.

Related posts

எடையை குறைக்க எட்டே வழிகள்,

nathan

எடை குறைப்பு சாத்தியம்

nathan

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan

அதிக உடல் எடை ஏற்படுத்தும் நோய்கள்!…

sangika

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…

nathan

எடையைக் குறைக்க எளிய ஆலோசனைகள்

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

ஊளைச் சதையை குறைக்கும் இயற்கை பானங்கள்

nathan