ஆரோக்கியம் குறிப்புகள்

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்

 

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம் உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம்.

ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும்.

சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை.

பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.

Related posts

கற்றாழை நீங்கள் அறியாத ஒரு பிரச்சனைக்கு அசத்தலான தீர்வை வழங்கும்.!!

nathan

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

nathan

இழந்த அழகை மீட்டுத்தரும் குங்குமப்பூ

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா? கூடாதா?

nathan

பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

nathan

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?

nathan

இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் 7 ஆசைகள்!!!

nathan

தினமும் உலர்திராட்சை… நன்மைகளோ ஏராளம்!

nathan