ஆரோக்கியம் குறிப்புகள்

ஏன் சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும்? சுத்தத்தை கற்றுக்கொடுத்த கொரோனா:

உலக நாடுகளை மிரள வைத்துக்கொண்டிருக்கும் வைரஸ் கொரோனா. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோரை பலி வாங்கிக் கொண்டு வருகிறது.

இப்போதுதான் மக்களுக்கு கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்திற்கே ஒரு செய்தியை சொல்லி கொடுத்துள்ளது சுத்தம்.

நம்மில் எத்தனை பேர் சாப்பிடும் முன்பு கையை சோப்பு போட்டு கழுவுகிறோம் என்று கேட்டால் பலரின் பதில் இல்லையென்றுதான் வரும்.

மனிதனின் உடலில் கைகளால் மட்டும்தான் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அவ்வளவு தனித்தன்மை வாய்ந்தது நம்முடைய கை.

கை விரல்கள் சுத்தம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று… முக அழகை மட்டும் பராமரித்தால் போதாது. உடல் முழுவதையும் பராமரிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலைநாட்டில் ஒருவரையொருவர் கைகொடுத்து, கட்டி அணைத்து வரவேற்பார்கள். ஆனால், இந்தியாவில் நம் முன்னோர்கள், ஏன் பெரியவர்களையும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்க்கும்போது இரு கைகளை கூப்பி ஏன் வணக்கம் சொன்னாங்க என்பதற்கு இப்பொழுது கொரோனா வைரஸ் உலகத்திற்கு காட்டிவிட்டது.

சில பேர் கைகயை சுத்தமாக வைத்துக் கொள்ளமல் கை கொடுப்பதால் பல கிருமிகள் மனித உடலை ஆட்கொள்ளும் என்பதற்கு கொரோனாவே ஒரு எடுத்துக்காட்டு.

சரி சொல்லுங்க… நம்மில் எத்தனை பேர் காலைக்கடனை முடித்து விட்டு கையை சோப்பு போட்டு கழுவுகிறோம்.

காலைக்கடனை முடித்து விட்டு வெறும் தண்ணீரால் சில பேர் கையை கழுவிவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் என்ன நேரும் என்று நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்க…

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது சில பேர் பசியால் அவசர அவசரமாக கையை சரியாக கழுவால் சாப்பிடுவார்கள்… இன்னும் சில பேர் வேலை பார்க்கும் இடத்தில் கையை கழுவாமல் மற்றவர்களின் உணவில் கை வைப்பார்கள். இதனால் நமக்கு தெரியாமலேயே நோய் கிருமிகள் நம் உடலில் சென்றுவிடும்.

இப்பொழுதிலிருந்தாவது கை கழுவுதலின் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

கையை எப்படி கழுவ வேண்டும்?

சும்மா சோப்பு போட்டவுடன் டக்குன்னு கழுவிவிட கூடாது. கையை முழுவதும் சோப்பை போட்டு ஒரு நிமிடம் ஊற வைத்த பிறகு கையை நன்றாக கழுவ வேண்டும். அது கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இதுவே சிறந்தது.

கையை கழுவாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  • சாப்பிடும் போது கையை கழுவாமல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • வைரஸ் காய்ச்சல் வரும். அதுக்கு உதாரணம் கொரனா வைரஸ்.

‘உலக கை கழுவும் நாள்’ ஆண்டுக்கு ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் எதிர்காலம் நம் கையில்… மேலை நாட்டு கலாச்சாரத்தில் மோகம் கொண்டு நம் நாட்டின் கலாச்சாரத்தை மறந்து விடுகிறோம்…. இனியாவது யாரையாவது பார்க்கும் போது வணக்கம் என்று சொல்லி கைகுலுக்காமல் கைகூப்பி கூம்பிடுங்க….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button