மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்…

நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் செழித்து வளரக்கூடிய இடமாக நமது வாய் உள்ளது. இந்த கிருமிகள் எந்த நேரமும் உங்கள் பற்களைத் தாக்கக்கூடும். ஆனால் நாம் அனைவரும், பற்களை சுத்தமாக தேய்ப்பதால் இவற்றைப் போக்க முடியும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை.

உங்கள் வாயின் ஆரோக்கியதிற்கு தீங்கு உண்டாக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. அவற்றுள் பேசுவது, மெல்லுவது, வயது முதிர்ச்சி போன்றவை சில காரணிகளாகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு பற்கள் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை நிர்வகிக்க சில சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். அதே நேரம் வாய் தொடர்பான சில பாதிப்புகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வாய் சுகாதாரம் மிகவும் அவசியம். ஆகவே பாதிப்புகள் அண்டாமல் இருக்க நம்மால் இயன்ற சில நிலைகளை கடைபிடிப்பது முக்கியம். பொதுவாக வாயில் ஏற்படும் சில பாதிப்புகளை தற்போது நாம் அறிந்து கொள்வோம்.

வாய் புண்

இது ஒரு பொதுவான கிருமி தொற்றாகும். வாய் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும். இந்த கொப்புளங்கள் தோன்றிய 7-10 நாட்களில் தானாகவே விழுந்து விடக்கூடும். இந்த வகை புண்களால் மிகப் பெரிய ஆபத்துகள் இல்லை என்றாலும், சில மருந்துகள் அல்லது கோளாறுகள் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும் நபர்களுக்கு சில நேரங்களில் அபாயத்தை உண்டாக்க முடியும். சில வழக்குகளில் தீவிர சிக்கல்களையும் உண்டாக்க முடியும். உதாரணத்திற்கு, இந்த தொற்று பாதிப்பு கண்களில் பரவும் போது, பார்வையை பாதிக்கக்கூடும்.

பல் சொத்தை

வாயில் வசிக்கும் கிருமிகளால் பற்கள் சேதமடையும் நிலை பல் சொத்தையாகும். இவை நீங்கள் உட்கொள்ளும் கார்போ சத்தை அமிலமாக மாற்றுகின்றன. இந்த கிருமிகள் மற்றும் அமிலங்கள் பற்களில் ஒரு படிவத்தை உண்டாக்கி பற்குழிகள் என்னும் கேவிட்டியை உண்டாக்குகின்றன .5 mouthodour 1585

ஈறு பிரச்சனைகள்

பீரியோடோன்டிடிஸ் என்பது ஈறு அழற்சி ஆகும். இது ஒரு பொதுவான பிரச்சனையாகும் . பற்களின் மேற்பரப்பில் சேரும் கிருமிகள் காரணமாக பற்களில் உண்டாகும் அழற்சியை இது குறிக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பின் பல் இழப்பு நேரக்கூடும் மற்றும் இது எலும்புகளையும் ஈறுகளையும் பாதிக்கக்கூடும். காலப்போக்கில் இது மாரடைப்பு , வாதம் மற்றும் இதர ஆரோக்கிய பாதிப்புகளையும் உண்டாக்கக்கூடும்.

வறண்ட வாய்

வாயில் உண்டாகும் வறட்சி என்பது ஒரு தீவிரமான பாதிப்பு இல்லை. ஆனால் இது வேறு மருத்துவ பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான உமிழ்நீரை சுரக்க முடியாத நிலை ஏற்படும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. உமிழ்நீர் உணவுகளை உடைக்க உதவி புரிந்து, பற்கள் அழுகும் நிலை மற்றும் ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவற்றில் இருந்து வாயை பாதுகாக்கிறது. வாயில் வறட்சி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைபாடு. நீரிழிவிற்கான அறிகுறியாகவும் இது இருக்க முடியும்.

வாய் துர்நாற்றம்

பற்களில் பின்பற்றப்படும் மோசமான சுகாதார பழக்கத்தினால் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும். சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளினால், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தினால் மற்றும் உணவுகளால் இந்த பாதிப்பு அதிகமாகக்கூடும். ஆரோக்கியமற்ற வாய் சுகாதாரம் காரணமாக பற்களுக்கு இடையில் மற்றும் ஈறுகளை சுற்றி கிருமிகள் வளர்ச்சி அடையும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும். ஈறு தொடர்பான பிரச்சனைகள் காரணமாகவும் தொடர்ச்சியான வாய் துர்நாற்றம் உண்டாகலாம்.dentalcavitiesnaturally 15

வாய் தொடர்பான பிரச்சனைகள் உண்டாவதை தடுப்பது எப்படி?

உங்கள் வாய் மற்றும் பற்களை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க , சிறந்த வாய் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். இதனால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாகும்.

* ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க மருத்துவமனை சென்று பற்களை பரிசோதியுங்கள்

* ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். சர்க்கரை மற்றும் அமிலம் சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்த்திடுங்கள். கார்போ உணவுகள் மற்றும் பற்களில் ஓட்டும் உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

* மவுத்வாஷ் பயன்படுத்துங்கள் மற்றும் தினமும் உங்கள் நாவை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

* புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

* அதிக தண்ணீர் பருகுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button