எடை குறைய

சூப்பர் டிப்ஸ்! உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

உடல் பருமன் என்பது உங்க உடலுக்கு மட்டும் நல்லது அல்ல. உங்க மன ஆரோக்கியத்தையுமே அது சேர்த்து கெடுக்கிறது. பலர் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் இதனுடன் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வுகள். எனவே உடல் பருமன் உடையவர்கள் எடையுடன் சேர்த்து அவர்களுடைய மனச் சோர்வையும் குறைக்க வேண்டியது அவசியமாகிறது.

உடல் பருமன் உடையவர்கள் சமூகத்தில் கேளிக்கை நபராக சித்தரிக்கப்படுவது, அவர்களின் எடையை கிண்டல் அடிப்பது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குகிறது. பெரும்பாலான ஆய்வுகள் உடல் பருமன் உடையவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை காட்டுகிறது. எனவே அதிகப்படியான உடல் எடையையும், அதே நேரத்தில் உங்க மன நிலையையும் பராமரிக்க என்ன செய்ய வேண்டும், வாங்க உங்களுக்காக சில டிப்ஸ்களை தருகிறோம்.

ஆய்வுகள்

2000 – 2016 ஆம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட உடல் பருமன் இதழில் இங்கிலாந்தில் அதிக எடை அல்லது பருமனான 519,513 பேரைக் கொண்டு ஆய்வு நடத்தினர். 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னும் இந்த ஆய்வை தொடர்ந்தனர். இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால், அவர்களுக்கு புதிய மனச்சோர்வுகள் ஆண்டுக்கு 92 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், அதில் 10,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. அதே மாதிரி அதிக எடை இருப்பவர்களில் மூன்றில் 2 பங்கு பேர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

3 obese 158

வாழ்க்கை முறை மாற்றம் அவசியம்

இது குறித்து லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆசிரியரான ஃப்ரேயா டைரர் கூறுகையில் மனச்சோர்வுக்கும் உடல் பருமனுக்கும் நிறைய தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்றார். மேலும் மன அழுத்த மருந்துகளை மட்டுமே கொடுப்பது இதற்கு தீர்வாகாது. உடல் பருமன் இருப்பவர்கள் கொஞ்சமாவது வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும் என்கிறார் அவர்.

ஆரோக்கியமான உடல் எடையை கொண்டு வருவது எப்படி?

உடல் பருமனால் எங்கும் இல்லாத நோய்கள் உங்களை தாக்க நேரிடலாம். அதிகப்படியான உடல் எடையை குறித்து நீங்கள் வருதப்படுவதோடு மட்டுமல்லாமல் இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றையும் பெறுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற முயற்சி செய்வது தான். இது நிச்சயம் உதவியாக இருக்கும்.

obesity 15

பின்பற்ற வேண்டியவைகள்:

* சரியான ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைக்க நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

* அதே மாதிரி பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க பழகுங்கள்.

மேற்கண்ட நல்ல விஷயங்களை செய்வது உங்களுக்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் பின்னாளில் உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும். இதன் மூலம் உங்க மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சமநிலை செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button