மருத்துவ குறிப்பு

குளிர்ச்சி தரும் கற்றாழை.

aloe-veraகற்றாழை ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை கொத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும், சாம்பல், சிவப்பு நிறங்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வறட்சியைத் தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையான சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதிவாசிகள் மலையில் நடக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள். இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இனப்பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெறும்.

கற்றாழை உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சி உண்டாக்கும். செரிமானத்தை விரைவுபடுத்தும், உடலை உரம் பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சுவையுணர்வை ஒழுங்குப்படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.

துவையல்-இதை சிறு துண்டுகளாக நறுக்கி எள் நெய் விட்டு வதக்கி, உளுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைக்கவும். வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.

பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கள்ளி முளையானின் முக்கிய வேதியப்பொருளின் தன்மையை ஆராய்ச்சி செய்து அது உடல் பருமனை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் குணமாக்கும் என்று கண்டுபிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டுள்ளார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.

கற்றாழை மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டுநாட்கள் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகளைக் குணப்படுத்தும் என்று தற்போது அறிந்துள்ளார்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வியாதியை இரண்டே வாரத்தில் விரட்ட முடியும்…

nathan

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

nathan

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

nathan

கல்லீரல் நோய்

nathan

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

nathan

உங்களுக்கு இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு அறிகுறிகள் என்ன?

nathan

ஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

nathan