அழகு குறிப்புகள்

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

seek

அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வயிற்றுக்கும் ஆசைப்படாத பெண்களே கிடையாது! ஆசைப்பட்டா போதுமா… நடக்கணுமேங்கிறீங்களா? அப்போ, இதப் படிங்க

முதல்ல… இடுப்பு அழகாக கல்யாணத்துக்கு முன்னாடி என் இடுப்பு சிம்ரன் மாதிரி அழகாக இருந்தது. இரண்டு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் இடுப்பைச் சுற்றி சதை தொங்குதுங்க’ என்று வருத்தப்படுகிறவரா நீங்கள்…? உங்க பிரச்னைக்கு ஒரே தீர்வு யோகாதான்! நாம் சாப்பிடும் உணவிலுள்ள அதிகபட்சமான கொலஸ்ட்ரால்தான் இடுப்பில் மடிப்பு விழ காரணம். இதற்கு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்தாலே போதும். வாரம் ஒரு நாளோ, அல்லது இரண்டு நாளோ வாழைத்தண்டை ஜூஸாகவோ, கூட்டாகவோ சாப்பிட்டு வந்தால் இடுப்பிலுள்ள வேண்டாத சதை, இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வயிறு அழகாக வயிற்றில் அழுக்கு சேராமலும், கேஸ்ட்ரிக் ட்ரபிள் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டாலே வயிற்றுக்கு 50% அழகு கிடைத்து விடும். இதற்கு சீரகத் தண்ணீர்தான் சிறந்த ட்ரீட்மெண்ட்!

ப்யூட்டி ரெசிபிகள்

1.சீரகத் தண்ணீர் தேவையான பொருட்கள் :
சீரகம் -4 டீஸ்பூன்,
தண்ணீர் – 3 லிட்டர்
செய்முறை :
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். இதை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இந்தத் தண்ணீரை ஆற வைத்து குடித்து வாருங்கள். அஜீரணம் வராது. ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மலச் சிக்கலும் ஏற்படாது. அப்புறமென்ன… கை மேல், ஸாரி… வயிறு மேல் பலன் (அழகு) தான் போங்க..

வெங்காய பச்சடி
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம்-2
தயிர் – 100 மி.கி.
உப்பு – சிறிதளவு
செய்முறை :
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு, அதில் தயிரையும், உப்பையும் கலந்து சாப்பிட்டு வாருங்கள். (காய்கறி சாலட்) வயிற்றில் சுருக்கமா… மூச்… வரவே வராதுங்க! பாவாடையை இறுகக் கட்டி கட்டி இடுப்பைச் சுற்றி கறுத்துப் போய் விட்டதா?கடுகு எண்ணெயை லேசாக சூடு செய்து, அதை இடுப்பைச் சுற்றி ஒரு மணி நேரம் ஊற விட்டு கடலை மாவால் தொடர்ந்து தேய்த்துக் கழுவி வாருங்கள். அழகான, கருப்பில்லாத ஆலிலை போன்ற வயிறு உங்களுக்கே உங்களுக்குதான்! டெலிவரிக்குப் பிறகு வரும் வயிறு சுருக்கத்துக்கு கடுகு எண்ணெயுடன் கோதுமை தவிடை கலந்து வயிற்றில் பூசி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர, வயிறு சுருக்கம் வரவே வராது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button