தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அதிகமா முடி கொட்டுதா? கரணம் இதுதான்!

பொதுவாக முடி உதிர்வதும், பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி பிளவு, அதீத முடி உதிர்வு என்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.

அன்றாட வாழ்க்கை முறையில் முடியை இழக்கும் ஒவ்வொருவரும் மன அழுத்தம் கொள்கிறார்கள். முடி பாதிப்படையவதற்கான காரணங்கள் இங்கு பார்ப்போம்.

எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது.

கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.

தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும்.

இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.

சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.

அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.

மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும்.

அதனால், தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும்.

கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.

ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.

முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன.

முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button