மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… அதிக பெண்களுக்கு ஏன் நெஞ்சுவலி வருதுன்னு தெரியுமா?

நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்பு ஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு அதிகளவில் ஏற்படுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஏன் அதிக பெண்களுக்கு நெஞ்சுவலி வருகிறது. அதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

  • பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் நெஞ்சுவலி வரும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் மாதவிடாய் நின்றவுடன் நெஞ்சுவலிக்கான வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்.
  • மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாகும்.
  • குறிப்பாக திடீரென்று மூச்சு வாங்குதல், வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ளலாம்.
  • வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்யலாம். இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லுமாம்.
  • எனவே இதயத்தின் வேலைப்பளு கூடும். இவ்வாறு கூடும்போது, இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ள முடியும்.
  • இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது சிறந்தது.
  • அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற்று விடலாம்.
  • முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை என்றால் பெண்களுக்கு நெஞ்சு வலி வர வாய்ப்பு இருக்கிறது.
  • நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் கூட பெண்களுக்கு நெஞ்சு வலி வரலாம்.
  • எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவதனால் கூட பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபடுவது மிகவும் அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button