மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…சுட சுட பாலில் தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து தெரியுமா? அலட்சியம் வேண்டாம் !

தேன் மற்றும் பால் இரண்டுமே அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.

இவை நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. தேன் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

பாலில் புரதச்சத்து, கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற நிறைய பொருட்கள் உள்ளன.

எனவே இவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது நமக்கு நன்மைகளை தருமா? ஆனால் நிறைய பேர் தேனையும் பாலையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள கூடாது என்று கூறுவார்கள்.

எனவே இந்த கலவை உண்மையில் நமக்கு நன்மைகளைத் தான் தருகிறதா அல்லது உடலுக்கு தீங்கானதா என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

​ஆரோக்கிய நன்மைகள்

 

  • தேன் மற்றும் பால் உண்மையில் ஒரு நல்ல கலவை ஆகும். இந்த இரண்டையும் வைத்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
  • எனவே இனி உங்க வழக்கமான பால் டம்ளரில் சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை கலந்து குடித்து வரலாம். இதன் மூலம் நீங்கள் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
  • எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பால் ஒரு சிறந்த கால்சியம் மூலமாகும்.
  • இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றும் கூட.
  • தேனுடன் பால் கலந்து குடிப்பது உங்க சுவாச பிரச்சனைகளை தடுக்க ஒரு சிறந்த தீர்வாகும். பால் மற்றும் தேன் கலந்த சூடான பானம் சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்களை எளிதாக்க மற்றும் பாக்டீரியாக்களை கொல்ல உதவுகிறது. நீங்கள் தொண்டை புண் நோயால் பாதிக்கப்படும் போது இது உங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
  • பால் மற்றும் தேன் கலந்த பானத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது நல்ல குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. வயிறு சம்பந்தமான எந்த நோயிலிருந்தும் நிவாரணம் பெற இது உதவுகிறது.
  • தேன் மற்றும் பால் நம் மூளைக்கு ஒரு அமைதியான மற்றும் ஆறுதலான விளைவை கொடுக்கிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த பானத்தை குடிப்பது உங்க தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

 

ஆபத்தான கலவையாக மாறுமா?

பொதுவாக தேன் மற்றும் பால் சேர்ந்த கலவை குறித்து மக்களிடையே பெரிய கட்டுக்கதைகள் நிலவி வருகிறது.

சூடான பாலில் தேனை கலப்பது அந்த பானத்தை நச்சுத்தன்மை அடைய செய்து விடும் என நம்பப்படுகிறது.

இருப்பினும் இது முழுவதும் உண்மையானது அல்ல. சர்க்கரையுடன் எதையும் சூடாக்குவது 5-ஹைட்ராக்ஸிமெதில்ஃபர்ஃபுல் அல்லது எச்.எம்.எஃப் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வெளியிட முடியும் என்பதே உண்மை. இந்த வேதிப்பொருளால் இயற்கையில் புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது.

பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் நடத்திய ஆய்வின்படி, தேன் சூடாகும்போது (> 140 ° C) மற்றும் நெய்யுடன் கலக்கும்போது HMF ஐ உருவாக்குகிறது. இது சரியான நேரத்தில் விஷமாக செயல்படக்கூடும்.

ஆனால் தேனை பாலில் கலக்கும் போது பானத்தின் உகந்த வெப்பநிலை 140 டிகிரிக்கு குறைவாகவே இருக்கும். எனவே தேனை சூடாக்காமல் இருப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் பாலை சூடுபடுத்தி 10 நிமிடங்கள் குளிர்ந்த பிறகு தேன் கலந்து குடியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button