தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா பொடுகுத் தொல்லையை நீக்கும் வெங்காயச் சாறு!

பதின் வயதினருக்கும், பெரியவர்களுக்கும் பரவலாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லை. எந்த வயதினருக்கும் ஏற்படும் பொடுகு, தலை முடியில் இருந்து செதில் செதிலாக உடுத்தும் உடையில் விழுவதால் பல நேரங்களில் நம்மை அவமானத்திற்கு உட்படுத்திவிடுகிறது. தலைமுடிகளுக்கு இடையே எரிச்சல், அரிப்பு, செதில்கள் போன்றவை பொடுகு இருப்பதன் அறிகுறிகள்.

பொடுகுத் தொல்லையைப் போக்க வீரியமான, இயற்கையான வீட்டு மருந்தாகக் கருதப்படும் வெங்காயச் சாற்றினை எப்படி சரியாக உபயோகிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

வெந்தயம்

பொடுகுக்கு மிகச்சிறந்த மருந்தாக வெந்தயம் கருதப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை மிருதுவாக அரைத்து வெங்காயச் சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலையில் ஸ்கால்ப் பகுதியில் படும் வண்ணம் நன்றாக தடவிவிட்டு அரை மணிநேரத்தில் குளித்துவிட வேண்டும்.

கற்றாழை

கற்றாழையினுள் இருக்கும் வழவழப்பான சாற்றை, வெங்காயச் சாறுடன் கலந்து தலையில் தடவி, ஒரு பத்து நிமிடம் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும். இது அரிப்பை கட்டுப்படுத்தும்.

பச்சைப் பயறு

பொடுகைப் போக்க, அரைத்த பச்சைப் பயறு பொடியில் வெங்காயச்சாற்றை கலந்து, வாரம் இருமுறை தலையில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட்

பொடுகுக்கு பீட்ரூட் நல்ல மருந்தாக செயல்படுகிறது. அதற்கு பீட்ரூட்டை நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன், வெங்காயச் சாற்றில் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தூங்கப் போவதற்கு முன், விரல் நுனியால் எடுத்து தலையில் நன்றாக தடவ வேண்டும்.

புடலங்காய் சாறு

புடலங்காய் சாறு பொடுகை நீக்குவதுடன், தடுப்பதற்கும் உதவுகிறது. புடலங்காய் சாற்றை வெங்காய சாறுடன் கலந்து தலையில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிட்டும்.

வெங்காயச் சாறு

பொடுகு மற்றும் முடி கொட்டும் பிரச்சனைக்கு வெங்காயம் அருமருந்தாகும். வெங்காயச் சாறு தலையில் இருக்கும் நுண்கிருமிகளையும், வெள்ளை செதில்களையும் நீக்குகிறது. மேலும் முடிக்கு சத்துக்களை கொடுத்து, முடியின் வேர்களை பலப்படுத்தி, இரத்த ஒட்டத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முடியின் வேர்களில் படும் வண்ணம் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை வெங்காயச் சாற்றுடன் கலந்து தடவுவதும் நல்ல பலனைத் தரும். மேலும் இந்த முறையினால் வெங்காயச் சாறு ஏற்படுத்தும் நாற்றத்தை நீக்கும். அரிப்பையும், பொடுகையும் போக்க இந்தக் கலவை உதவுகிறது.

தேன்

நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை வெங்காயச் சாற்றுக்கு உண்டு. இது தலையை நன்றாக சுத்தம் செய்து, பொடுகை நீக்குவதோடு அல்லாமல், பலவகையான தலைமுடிப் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் பளபளப்பான, உறுதியான தலைமுடிக்கு வழிசெய்கிறது. அதற்கு ஒரு கரணடி வெங்காயச் சாற்றை தேனுடன் கலந்து தலையில் தடவினால் பொடுகு நீங்கும்.

ஆலிவ் ஆயில்

ஒரு கரண்டி ஆலிவ் எண்ணெயை 3 கரண்டி வெங்காயச் சாற்றுடன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். பின் சுடுநீரில் நனைத்து பிழிந்த துண்டு ஒன்றை தலையில் அரை மணிநேரத்திற்கு கட்டி வைத்திருந்து, பிறகு மிருதுவான ஷாம்புவால் தலையை சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது பொடுகை திரும்ப வரவிடாமல் தடுக்கும்.

தேங்காய் எண்ணெய்

ஒரு கரண்டு எலுமிச்சை சாற்றை, ஐந்து கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 3 கரண்டி வெங்காயச் சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 30 நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள். இது வெள்ளை செதில்களையும், பொடுகையும் நீக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

வினிகரில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் பொடுகை நீக்க உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரை வெங்காயச் சாற்றுடன் கலந்து, 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவலாம்.

முட்டை

இரண்டு முட்டைகளை நன்றாக அடித்துக் கொண்டு, வெங்காயச் சாற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதை தலையில் தடவி விட்டு, அரை மணிநேரம் கழித்து கழுவிவிடுங்கள். முட்டை சிறந்த கண்டிஷனராக செயல்படுவதால், பொடுகினால் ஏற்படும் வறண்ட கேசத்தை மிருதுவாக்குகிறது.

ஆப்பிள் சாறு

2 கரண்டி ஆப்பிள் சாற்றினை, 2 கரண்டி வெங்காயச் சாற்றுடன் கலந்து தலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவினால் பொடுகு நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button