ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…குட்டையா இருக்குறவங்களுக்கு இப்படியெல்லாம் சிக்கல் வருமா?

உயரத்தைப் பற்றியெல்லாம் இங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை. என்ன லைட்டா பொறாமதான் என்ற ரேஞ்சுக்கு தான் அதனை டீல் செய்கிறோம். அவர்களின் ஜீன் படி தான் உயரம் நிர்ணியிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வயது வரை உயரம் வளரும் அதன்பிறகு அப்படியே நின்றுவிடும்.

சிலருக்கு உயரம் குறைவாக இருக்கிறோம் என்று சொல்லி தாழ்வு மனப்பான்மையே வந்திருக்கும். இவர்களுக்குத் தான் இந்தப் பிரச்சனையென்று பார்த்தால் உயரமானவர்கள் எல்லாம்…. நொந்து புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆக, இதிலேயே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் எதிர்ப்பார்ப்புகள் தான் உங்களது வாழ்க்கையை சீரழிக்கிறது என்று. இருப்பதை,வருவதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அளவுக்கு மீறி ஆசைப்படுவது பின்னர், அது இல்லையே, கிடைக்கலயே என்று வருத்தப்படுவது. அழகு என்பதற்கு நீங்களே ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளாதீர்கள். அழகு என்ப்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடும்.

சரி, இப்போது குட்டையாக இருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சில பிரச்சனைகளைப் பற்றி பார்க்கலாம். இதிலெல்லாம் சிக்கல் வருமா? என்று ஒரு கணம் யோசிக்க வைக்கக்கூடிய பதிவு. தொடர்ந்து வாசியுங்கள்.

க்ரூப் போட்டோ :

க்ரூப் போட்டோக்களில் எந்த முகமும் சரியாகத் தெரியாது. அதில் எங்களைப் போன்ற குட்டையானவர்கள் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். தோண்டியெடுத்து உற்றுத் தேடினால் எங்கள் தலை அண்ணாந்து எக்கிப் பார்ப்பது தெரியும்.

ஸ்டூல் எங்கடா :

வீட்டில் சொல்லி வைத்தார் போல எல்லாரும் நம்மை விட உயரமாக இருக்க, எல்லா பொருட்களையும் குறிப்பாக தீனி டப்பாக்களை உயரமான செல்ஃப்களில் ஒளித்து வைத்துவிடுவார்கள். பொருள் அங்கே தான் இருக்கிறது என்று தெரிந்தும் அதை எடுப்பதற்குள் பல தில்லாலங்கடி வேலைகளை செய்ய வேண்டியிருக்குமே…..

ஓடு ஓடு :

உயரமாக இருப்பவர்கள், கால்கள் நீளமாக இருக்கும் என்பதால் வேகமாக நடப்பார்கள். அவர்களுடன் செல்லும் போது நமக்கு ஓடுவது போலத் தான் தோன்றும். மூச்சு வாங்கிக் கொண்டே பின்னால் ஓடினால், ஏன் இவ்ளோ மூச்சு வாங்குற ஹை கொலஸ்ட்ராலா என்று கேட்டு கடுப்பேற்றுவார்கள்.

ஒரு போட்டோ ஒழுங்கா எடுக்குறியா ப்ளீஸ் :

நாமோ நான்கடி, உடனிருப்பவரோ ஆறு அடி என்றால் பாவம் போட்டோகிராபர் என்ன செய்வார். இரண்டு பேரையும் மெர்ஸ் செய்து போட்டோ எடுப்பதற்குள் அவருக்கு வயதாகிவிடும்.

கால் தரையிலயே படக்கூடாது :

சோஃபாவில் உட்கார்ந்தால் கால் தரையிலேயே படக்கூடாது. தரையில படாம இருக்குறது தான் ஸ்டைல் அது தான் கெத்து என்று கிளப்பி விட வேண்டியது தான்.

ஒண்ணத்தையும் கீழ வைக்க மாட்டானுக :

கடைகளில் குறிப்பாக டிப்பார்ட்மெண்ட்ல் ஸ்டோருக்குச் சென்றால் நாங்கள் படுகிற பாடு சொல்லி மாளாது. எதெல்லாம் எங்களுக்குத் தேவையோ அத்தனையும் தூக்கி மேலே உயரமான செல்பில் வைத்திருப்பார்கள். தள்ளிக் கொண்டு வந்த வண்டியை நிறுத்தி விட்டுதேவையான பொருளை எடுப்பதற்குள் வண்டி எங்கோ யாரையோ முட்டிக் கொண்டு வம்பு இழுத்து வைத்திருக்கும்.

செவுத்தல மாட்டுங்கன்னா சீலிங்ல மாட்டி வச்சிருக்கான் :

ஹோட்டல் ரெஸ்ட் ரூம்களில் பெரிய கண்ணாடியிருக்கும். அங்கேயில்லாம் நாம் ஒன்றும் மெனக்கெட வேண்டாம். ஆனால் சில இடங்களில் முகம் பார்க்கும் அளவிற்கு சின்ன கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்களே. நின்றால் செதுக்கியெடுத்தாற் போல நம் நெற்றி மட்டுமே தெரியும்.

நண்பர்கள் எனும் பக்கிகள் :

இது நண்பர்கள் மத்தியில் வெகு இயல்பாக நடக்கும். நாம் வேறு அடக்கமாக குட்டையாக இருக்க, அவர்கள் கை வைக்க ஸ்டாண்டாகத் தான் நம் தலையை பயன்படுத்துவார்கள். ஏண்டா ஏன்…. அப்டியே ஒரு ஸ்டாண்டு வச்சு கொசுவர்த்தி சுருள் வச்சுக்கோயேன்….. ராஸ்கல்ஸ்

அத்தாடி பேய்…. :

வாட்ஸ் யுவர் ஹைட் என்று பல்லைக்காட்டுபவர்கள் எல்லாம் நமக்கு என்னவோ பார்க்க பூதங்களாகத் தான் தெரியும். மனுசப் பயன்ன அடக்க ஒடுக்கமா நாலு இல்லனா போனா போகட்டும்னு ஒரு அஞ்சு அடின்னு வளரலாம்…. ஓசியா கிடைக்குதுன்னு வாங்கி குவிக்கிற மாதிரி வளர்ந்துட்டே போனா…. அதுக்கு நாங்களா பொறுப்பு…

வாசிங் பாஸ் வாசிங் :

வாசிங் மெஷின் சற்று உயரம், அதில் கடைசியில் அடியில் கிடக்கும் துணியை எடுக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சிலர் வாசிங் மெஷின் அதிக தண்ணீர் புழங்குகிற இடம் என்று சொல்லி, சற்று உயரமான கல்லைப் போட்டு நம்மை டார்ச்சர் செய்வார்கள். ஒவ்வொரு துணியை எடுக்கும் போது குப்பறப்படுத்து பல்டியடித்து என எக்கச்சக்க சாகசங்களை செய்ய வேண்டும்.

இந்தக் கொடுமைய எங்கன்னு போய் சொல்ல :

கட்டில போடும் போதே சொன்னேன்…. கேட்டாத்தான . இதோ இப்ப பாருங்க கட்டில்ல ஏறி உக்காரதுக்கு ஒரு ஸ்டெப் ஸ்டூல்…. நம்மெல்லாம் யாரு? இதுல ஏறாமையே கட்டில்ல உக்காருவோம் தெரியுமா. அட நெசமாங்க சொன்னா நம்பனும். மெதுவா வந்து ஏறினா தான இந்த ஸ்டெப் ஸ்டூல் ஓடிவந்து ஒரே தாவு தாவினா பக்கதுல யார் மண்ட உடஞ்சா நமக்கென்ன என்று ஓடிவந்து நம் இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டியது தான்.

உங்களுக்கும் இஸ்க் இஸ்க் என்று தான் கேட்கிறதா ? :

அவசரமாக ஓடும் போது தடுத்து நிறுத்தினார் போல இப்படியான தடங்கல்கள் வரும். சிலருக்கு எல்லாம் இப்படி சட்டையில் டோர் லாக் மாட்டுகிறது. எனக்கு சில சமயங்களில் பெல்ட் ஹூக் மாட்டி கதவோடு இழுத்து உள்ளே ஓடியிருக்கிறேன்.

All Image Source

ஓ மை பேபி :

இது எல்லா இடங்களிலும் நமக்கு கிடைக்கூடிய ஒரு பெயர்…. சில இடங்களில் ரசித்தாலும், சில இடங்களில் ஆங்கிரி பேர்டாக மாறிடுவோம். நான்கு அடியில் இருப்பதால் நான்கு வயதுக் குழந்தை என நினைப்பு….. ஹோ மை பேபி…. சோ ஸ்வீட் என்று கொஞ்சுவார்கள்.

குடும்பத்துடன் ஆட்டோ, கார் என பயணித்தால், ஏழு கழுத வயசானாலும் நம்மள தூக்கி மடில உக்கார வச்சுப்பாய்ங்க…. அடேய் இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்கடா

மிஸ் யூ பேபி…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button