மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பி.சி.ஓ.எஸ் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது எப்படி? இதனை தடுக்க என்ன பண்ணலாம்?

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள்.

இந்த பிரச்சனை பொதுவாக 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது 20 வயதுள்ள பெண்களுக்கே, இந்த பிரச்சனை வருகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம், மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

சினைப்பைக் கட்டிகள் பெண்களுக்கு வந்தால், அதனை உடனே தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.

அந்தவகையில் தற்போது கருப்பை நீர்க்கட்டிகள் எனப்படும் பி.சி.ஓ.எஸ் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது எப்படி? இதனை எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.

ஆரம்ப கட்டத்திலேயே எப்படி அடையாளம் காணலாம்?

 

  • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்சையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

 

  • பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகு நிகழும்போதும், இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தல்.

 

  • உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும்.

 

  • ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு மற்றும் முடி வளர்வது. குறிப்பாக முகத்தில் அதிகளவு முடி வளர்வது ஒரு முக்கிய அறிகுறியாகும்.

 

  • உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

 

  • டைப் 2 நீரிழிவு நோய் மற்றொரு முக்கிய அறிகுறியாக உள்ளது. இதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

 

எப்படி சரி செய்வது?

 

  • பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

 

  • என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்றாகும்.

 

  • வழக்கமான உடல் உடற்பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

 

  • உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பது இன்சுலின் அளவை சீராக வைத்து கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

  • தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்.

 

  • பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button