அழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5-10 நிமிடம் ஆவி பிடித்து, தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை, கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்துக்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
மற்றொரு நன்மை, முதுமை தோற்றதை தடுக்கும். சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கி விடுவதால் தான், முகம் பளிச்சென்று  இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத்தோற்றதை தரும்.
முகப்பரு இருக்கும் போது, முகத்துக்கு 4-5 நிமிடங்கள் ஆவி பிடித்தால் நல்லது. பின், 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், முகப்பருக்கள் உடைந்து விடும். ஆவி பிடிக்கும் போது, முகத்துக்கு சரியாக ரத்த ஓட்டம் இருக்கும்.

சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். நேரம் இருக்கும் போது முகத்துக்கு ஆவிபிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

Related posts

30 வயதை நெருங்குபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றை செய்யுங்கள்!

sangika

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan

கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்..

nathan

1 comment

priya September 19, 2015 at 12:00 am

Nice

Reply

Leave a Comment

%d bloggers like this: